மத்ததெல்லாம் நடிப்பாங்க இது மட்டும் நடிக்க மாட்டாங்களா.. தனத்தை கலாய்த்த மீனா.! கிளுகிளுப்பாக செல்லும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

Pandiyan stores: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தொடர்ந்து அடுத்தடுத்த பிரச்சனைகள் அடுக்கி வரும் நிலையில் ஒரு வழியாக கண்ணன் ஜெயிலிலிருந்து வெளியில் வந்திருக்கிறார். ஆனால் கண்ணன் ஜாமினில் வந்திருக்கும் நிலையில் தான் அந்த பணத்தை லஞ்சமாக பெறவில்லை தனது மீது எந்த தப்பும் இல்லை என்பதனை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

பிறகு கஸ்தூரியிடம் கண்ணன்- ஐஸ்வர்யா வாங்கி இருந்த மொத்த பணத்தையும் தனம் தந்து விடுகிறார். இதனை அடுத்து எப்படியாவது தனத்தை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அறுவை சிகிச்சை செய்து முதலில் குழந்தையை வெளியில் எடுத்துவிட்டு ப்ரஸ்ட் கேன்சருக்கான ட்ரீட்மெண்ட்டை ஆரம்பிக்க வேண்டும் என முல்லை, மீனா முடிவெடுத்திருக்கிறார்கள்.

இவ்வாறு திடீரென குழந்தையை அறுவை சிகிச்சை செய்து எடுக்க வேண்டும் என்றால் இதனை மூர்த்தி மற்றும் அவருடைய தம்பிகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதற்காக தனத்தை வயிறு வலிப்பது போல் நடிக்க சொல்கின்றனர். எனவே தனத்திற்கு பிரசவ வலி வந்த மாதிரி நடிக்க சொல்ல ஆனால் இதனை தனம் ஏற்றுக்கொள்ளாமல் தனக்கு நடிக்க தெரியாது எனக் கூறுகிறார்.

எனவே முல்லை உடனே மீனாவிற்கு ஃபோன் செய்து தனம் அக்கா நடிக்க மாட்டேங்குறாங்க என புலம்ப தம்பிகள் மீது மட்டும் பாசம் வைக்கிற மாதிரி நடிக்கிறாங்க இதை மட்டும் நடிக்க தெரியாதா என மீனா கலாய்க்கிறார். ஒருவழியாக அக்காவுக்கு வலி வந்து விட்டதாக முல்லை அலற ஒட்டுமொத்த குடும்பமும் பயந்து போய்விடுகின்றனர்.

ஹாஸ்பிடலுக்கு தனத்தை அழைத்துச் செல்ல அங்கு கதிர் ஜீவாவை பார்ப்பதால் தனக்கு நடிப்பு வரவில்லை என்பதனால் தனம் மயங்கி விழுந்து விடுகிறார். இவ்வாறு இவ்வளவு பெரிய கஷ்டமான சூழ்நிலையிலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மிகவும் காமெடியான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது.

இதனை அடுத்து மருத்துவமனையில் உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என கூறியதால் அதற்கு மூர்த்தி மறுக்கிறார். ஆனால் மீனா, முல்லை அனைவரையும் சமாதானப்படுத்தி ஒரு வழியாக தனத்தின் ஆபரேஷனுக்கு மூர்த்தியை சம்மதிக்க வைக்கிறார்கள். இவ்வாறு இனி வரும் எபிசோடுகளில் எதிர்பாராத ட்டுவிஸ்ட்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment