6 வருடத்திற்கு முன்பே விஜய் டிவியில் நடித்துள்ள பாண்டியன் ஸ்டோர் கதிர்.! எந்த சீரியலில் தெரியுமா.?

பொதுவாக சின்னத்திரையில் உள்ள நடிகர்களாக இருந்தாலும் நடிகைகளாக இருந்தாலும் இவர்கள் சமீபத்தில் நடித்து வரும் ஒரே சீரியலில் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்து ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்து இருப்பார்கள் ஏன் இவர்களுக்கு என்று ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி மவுசு கூட உருவாகி இருந்திருக்கும்.

ஆனால் இதற்கு முன்பு அந்த நடிகர், நடிகைகள் பல சீரியல்களில் நடித்து இருப்பார்கள் அவ்வபோழுதெல்லாம் பிரபலமடையாத இவர்கள் ஒரே ஒரு சீரியல் மூலம் பிரபலமடைந்தது இருப்பார்கள்.அப்படிப்பட்டவர்களை ரசிகர்கள் அனைவரும் அந்த நடிகர், நடிகைகளைப் பற்றிய பழைய தகவல்களை தோண்டி எடுத்து இணையதளத்தில் வைரலாக்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அந்தவகையில் டான்ஸ் மாஸ்டராக பல ஆண்டுகளாக பணியாற்றி வந்து சொல்லும் அளவிற்கு பிரபலமடைய முடியாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து இதன் மூலம் வெள்ளித்திரையிலும் நடித்து வருபவர் தான் கதிர் கேரக்டரில் நடித்து வரும் குமரன்.

பாண்டியன் ஸ்டோர் சீரியல் இவரின் திரை வாழ்க்கைக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்துள்ளது. தற்போது உள்ள இளசுகளின் மத்தியில் காதல் மன்னன் என்ற பெயருடன் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் பொதுவாகவே அமைதியாக இருக்கும் குணம் உடையவர்.  ஆனால் நடிப்பு என்று வந்துவிட்டால் சொல்லத் தேவையில்லை தனது இன்ஸ்டாகிராமிலும், பாண்டியன் ஸ்டோர் சீரியளிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் பல முன்னணி நடிகர்களின் வேடங்களை அணிந்து அவர்களைப்போல் நடனமாடி வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இவ்வாறு பிரபலமடைந்து உள்ள இவர் இவரின் ரசிகர்கள் இவர் நடித்துள்ள பழைய சீரியல் ஒன்றை நினைவு படுத்தி உள்ளார்கள்.

அதாவது குமரன் ஆறு வருடத்திற்கு முன்பு விஜய் டிவியில் செந்தில் மற்றும் ஸ்ரீஜா உள்ளிட்ட பலரும் நடித்து வந்த மாப்பிள்ளை சீரியலில் குமரன் நடித்துள்ளார். அந்த சீரியலில் இவரின் லுக் எப்படி இருந்தது என்ற புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்கள்.

kumaran
kumaran

Leave a Comment