பாண்டியன் ஸ்டோர் சீரியலில் திடீர் மாற்றம்.! விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் எந்த ஒரு சீரியலுக்கும் இப்படி கிடையாது.!

0

விஜய் தொலைக்காட்சியில் பல சீரியல்கள்  வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.  அதிலும் குறிப்பாக பாண்டியன் ஸ்டோர் சீரியல் மக்களிடையே மட்டுமல்லாமல் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்த சீரியலாக பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த சீரியலில் முல்லை  என்ற கதாபாத்திரத்தில் நடித்த சித்தரா திடீரென தற்கொலை செய்துகொண்டது சீரியல் ரசிகர்களிடையே மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மீண்டும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது இந்த சீரியலில் தற்பொழுது முல்லை கதாபாத்திரத்தில் காவ்யா நடித்து வருகிறார்.

முதலில் முல்லை கதாபாத்திரத்தில் சித்ராவை தவிர மற்ற நடிகைகளை ஏற்றுக்கொள்ள ரசிகர்கள் மறுத்தார்கள் பின்பு போகப் போக கொஞ்சம் கொஞ்சமாக தற்பொழுது முல்லையாக காவியாவை  ஏற்றுக் கொண்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஒரு புதிய நடிகை என்ட்ரி கொடுத்துள்ளார் அதனால் இந்த சீரியலில் அடுத்தடுத்து சண்டை காட்சிகள் வரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அப்படி இருக்கும் வாகையில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் சமீபத்தில் ஒளிபரப்பப்பட்ட எபிசோடில் சீரியல் குழு புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

அதாவது சீரியல் நடிகர்கள் பேசும்பொழுது கீழே அப்படியே தமிழில் எழுதியுள்ளார்கள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வரும் எந்த சீரியலுக்கும் இப்படி ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

pandiyan stors
pandiyan stors