இந்த ஒரு காரணத்திற்க்காக தான் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து ஐஸ்வர்யாவை தூக்கி வீசியதா விஜய் டிவி.! அதிர்ச்சியில் ரசிகர்கள்

0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வரும் பல சீரியல்களுக்கு ரசிகர் பட்டாளம் அதிகம் அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. இந்த சீரியலில் இடையில் என்ட்ரி கொடுத்தவர் ஐஸ்வரியா இவர் பாதியில் வந்தாலும் இவரை மக்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது ஐஸ்வர்யா ஜோடிக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர் தொடரில் இருந்து திடீரென ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்த தீபிகா விலகிவிட்டார். இதனால் சமூக வலைத்தளத்தில் எதற்காக விலகினார்கள். என பலரும் கேள்வி எழுப்ப தொடங்கிவிட்டார்கள் மேலும் தீபிகா ‘இதுவும் கடந்து போகும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணு தீபி’ என தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

எதற்காக விலகினார் என்ற காரணம் தற்போது தெரியவந்துள்ளது தீபிகா அவர்களுக்கு முகப்பரு அதிகமாக இருந்ததால் ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொண்டே இருந்தார் அதேபோல் பாண்டியன் ஸ்டோர் சீரியல் குழு முகப்பருவை விரைவாக சரி செய்யுங்கள் என டைம் கொடுத்து இருந்தார்கள். ஆனால் அந்த ட்ரீட்மென்ட் கொஞ்சம் டைம் எடுத்துக் கொண்டதால் வேறு வழியே இல்லாமல் தீபிகாவை ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் இருந்து மாற்றிவிட்டார்கள்.

மேலும் தீபிகா கூறியதாவது முன்னாடியே சீரியலில் நிறைய விஷயங்கள் மாறிவிட்டது டஸ்கி ஸ்கின் டோனில் ஹீரோயினாக நடிக்கிறார்கள் அதே மாதிரி ஜீரோ சைஸ் இல்லாதவர்கள் ஹீரோயினா நடிக்கிறார்கள் இன்னும் சொல்ல வேண்டுமென்றால் கர்ப்பமாக இருந்து கொண்டும் நடித்து வருகிறார்கள் ஆனால் அப்போ இதோபோல் கிடையாது என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே என்னிடம் நிறைய பேர் ஏன் உங்கள் முகம் இப்படி இருக்கு நல்லாவே இல்லை என கமெண்ட் செய்திருக்கிறார்கள் ஆடியன்ஸ் ஓட பார்வை விரிவடையாத வரை மீடியா உடைய பார்வையை மாற்ற முடியாது எனக் கூறியுள்ளார்.

deepika
deepika

எனக்கு விஜய் தொலைக்காட்சியில் இருந்து எந்த ஒரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது நான் நடிக்கலை என்றாலோ, இல்லை செட்டில் யார் கூடயாவது சண்டை போட்டேன் என்று கூறினாலும் நான் வருத்தப்பட்டு இருப்பேன் முகப்பரு இருப்பது என்னுடைய தப்பு இல்லையே முகம் என்றால் முகப்பரு வர தானே செய்யும் அதனால் நாம் சேனலை தப்பாக சொல்ல மாட்டேன் ஏனென்றால் அவர்கள் என்னுடைய ட்ரீட்மென்ட் செய்ய நிறைய டைம் கொடுத்தார்கள் ஆனால் என்னால் சரி செய்ய முடியவில்லை அதனால்தான் சீரியலில் இருந்து விலக வேண்டிய இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது.

மேலும் அவர் கூறியதாவது நானும் நடிகர் சரவணனும் நல்ல நண்பர்கள் நிறைய பேர் லவ்வர்ஸ் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் அண்ணன் தங்கை பைக்கில் போனாலே லவ்வர்ஸ் என சொல்றது இந்த உலகம் எங்களுக்குள் இருப்பது வெறும் ஃப்ரெண்ட்ஷிப் தான் நீங்க புரிஞ்சிக்கிட்டாலும் இல்லை என்றாலும் எங்கள் ஃபேமிலி புரிஞ்சி கிட்டாங்க எனக் கூறினார்.

மேலும் விரைவில் ட்ரீட்மென்ட் முடிந்த பிறகு ஐஸ்வர்யா மாதிரியான முக்கியமான கதாபாத்திரம் அல்லது ஹீரோயினாக நடிக்க முடிவு செய்துள்ளேன் என புன்னகையுடன் கூறியுள்ளார்.