பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கதிர் கதாபாத்திரத்தில் இனி இவரா!! வைரலாகும் புகைப்படம்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த சீரியல் பாண்டியன் ஸ்டோர்.

2k கிட்ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ் என்று அனைவரும் பார்க்கும் சீரியலாக பிரபலமடைந்துள்ளது. இந்த சீரியலில் முல்லை மற்றும் கதிர் காதல் தான் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

தற்போது இந்த சீரியல் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்பொழுது சித்ராவுக்கு பதில் காவியா நடித்து வருகிறார் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

சில நாட்களாக கதிர் வேடத்தில் நடிக்கும் குமரனை சீரியலில் காட்டவில்லை. எனவே ரசிகர்கள் குமரன் எங்கு போனார் என்று தொடர்ந்து கேட்டு வந்ததால் அவர் பெங்களூருக்கு படம் ஷூட்டிங்கிற்காக சென்றுள்ளார் என்று கூறியிருந்தார்கள்.

இந்நிலையில் பிரபல யூடியூப் சேனல் ஒன்று குமரனுக்கு பதிலாக குக்கு வித் கோமாளியில் பங்கு பெற்று வரும் அஷ்வின் நடிக்க உள்ளதாக பதிவிட்டு இருந்தார்கள்.

இதனைக் கண்ட ரசிகர்கள் ஷாக் ஆனார்கள் ஆனால் இந்த செய்தி உண்மையில்லை வதந்தி என்று கூறப்பட்டுள்ளது.

ashwin

Leave a Comment

Exit mobile version