காதலை வெளிப்படுத்தி வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாண்டியன் ஸ்டோர் முல்லை.! வைரலாகும் வீடியோ

0

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பப்பட்ட வந்த சீரியல் என்றால் அது பாண்டியன் ஸ்டோர் சீரியல் தான் இந்த சீரியலில் நடிகை சித்ரா முல்லை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தார்.

இவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அதுமட்டுமில்லாமல் பல பிரபலங்கள் சித்ரா தற்கொலை செய்து கொள்ளவில்லை இது திட்டமிட்ட சதி என கூறினார்கள்.

pandiyan-store
pandiyan-store

இந்த நிலையில் சித்ராவின் கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வந்தார்கள். இந்தநிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் சித்ராவிற்கு பதிலாக பாரதிகண்ணம்மா சீரியலில் காவியா நடித்து வருகிறார்.

இவரை முதலில் முல்லை கதாபாத்திரத்தில் ஏற்றுக்கொள்ள ரசிகர்கள் தயங்கினார்கள் பின்பு போகப்போக இவரின் நடிப்பை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.  பாரதிகண்ணம்மா சீரியல் மூலம் அறிமுகமான இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார்.

இந்த நிலையில் காவியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகான பாடல் ஒன்றுக்கு தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரல் ஆகி வருவது மட்டுமல்லாமல் அதிக லைக்ஸ் பெற்று வருகிறது

வீடியோ வை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்