இனி சித்ரா கதாபாத்திரத்தில் நடிக்கப் போவது இந்த நடிகையா.? அதிரடி பதிவை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர் மீனா.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் நடித்து  மிகவும் பிரபலம் அடைந்தவர் சித்ரா இவர் சமீபத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் சித்ராவின் மரணத்தில் ஏதோ மர்மம் இருப்பதாக பலரும் கூறி வந்த நிலையில் பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டை போலீஸ் வெளியிட்டார்கள்,  அதில் முழுக்க முழுக்க இது தற்கொலை தான் என அறிவித்திருந்தார்கள். விஜய் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்ட வந்தாலும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்த சீரியலாக பார்க்கப்பட்டு வருகிறது.

இதற்கு காரணம் கதிராக நடிக்கும் குமரனும் முல்லையாக நடிக்கும் சித்ராவும் மிகக் கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.  இவர்களின் ஜோடி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஜோடியாக அமைந்தது அதனால்தான் இந்த சீரியல் மிகவும் பிரபலமடைந்தது.

இதில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த இல்லத்தரசிகளின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சித்ரா. நடிகை சித்ரா மாடலிங், தொகுப்பாளினி, நடிகைகள் நடனம் என பல திறமைகளைக் கொண்டவர்.  இவர் முதன்முதலில் மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தான் பணியாற்றினார் அதன்பிறகு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்து வந்தார்.

mullai actor
mullai actor

இப்படி சமூக வளைதளத்தில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார் இந்த நிலையில் சித்ரா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தான் ரசிகர்களிடம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது.  மேலும் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதில் அவரின் வருங்கால கணவர் ஹேம்நாத் மற்றும் அவரின் அம்மா கொடுத்த மன அழுத்தம்தான் காரணம் என கூறுகிறார்கள்.

இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் சித்ராவிற்கு பதிலாக முல்லை கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என்றும் மிகப்பெரிய கேள்வி எழுப்பி வருகிறது.  சமீபத்தில்கூட நடிகை சரண்யா முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியானது ஆனால் அதனை சரண்யா முற்றிலுமாக மறுத்தார்.

இப்படி இருக்கும் நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லைக்கு பதிலாக பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்துவரும் அறிவுமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவியா நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது இதுகுறித்து பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்துவரும் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு இட்டு அதில் யூடிப் லிங்க் ஒன்றையும் போட்டுள்ளார்..

Leave a Comment