பாண்டியன் ஸ்டோர் சிங்கப்பூரிலும் வைரலாகும் புதிய புகைப்படம்.! வச்சி செய்யும் நெட்டிசன்கள்.

விஜய் தொலைக்காட்சியில் டிஆர்பி யில் முதல் இடத்தை பிடிப்பதற்காக பல புதிய சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள் அதிலும் படத்தின் டைட்டிலை வைத்து சீரியல்களை ஒளிபரப்பி வெற்றி கண்டு வருகிறார்கள் அந்த வகையில் ராஜா ராணி, சரவணன் மீனாட்சி, பாண்டியன் ஸ்டோர் என பல சீரியல்களை ஒளிபரப்பி டிஆர்பி முதலிடம் பிடிக்கிறார்கள்.

இந்தநிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர் இந்த சீரியல் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது மேலும் இந்த சீரியலில் ஸ்டாலின் சுஜிதா, குமரன், வெங்கட், ஹேமா, சித்ரா என பல நட்சத்திரங்கள் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள். விரு விருப்பாக போய்க்கொண்டிருந்த இந்த தொடர் டிஆர்பி யில் நல்ல இடத்தை பிடித்துள்ளது.

இந்த சீரியலில் முல்லை என்ற வேடத்தில் நடித்து வந்தவர் சித்ரா சமீபத்தில் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல் ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியது. தற்பொழுது முல்லை கதாபாத்திரத்தில்  பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்து வந்த காவியா அறிவுமணி தான் நடித்து வருகிறார்.

pandiyan store
pandiyan store

முதலில் காவியா அறிவுமணி நடிப்பை முல்லை கதாபாத்திரமாக ஏற்க மறுத்தார்கள் ரசிகர்கள் ஆனால் போகப்போக முல்லையாகவே மாறி விட்டார் அதனால் தற்போது அவரை முழுமையாக ஏற்றுக் கொண்டார்கள் ரசிகர்கள். கொரனோ காலகட்டத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டு பல நாடுகளில் ஊரடங்கு அமல் படுத்தி வருகிறார்கள்.  இந்த நிலையில் இந்தசீரியல் பெயரில் சிங்கப்பூரில் ஒரு கடை திறக்கப்பட்டுள்ளது என வெங்கட் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.

இதைப்போல் பல தயாரிப்பு நிறுவனமும் வெவ்வேறு இடங்களில் பாண்டியன் ஸ்டோர் என்ற பெயரில் கடை உள்ளதா என கேட்டு பதிவு செய்துள்ளார்கள்.

pandiyan store
pandiyan store

Leave a Comment