இந்த ஹிட் திரைப்படத்தை தயாரிக்க 27 தயாரிப்பாளர்களிடம் ஏறி ஏறி இறங்கினேன்.! பக்கீர் கிளப்பிய இயக்குனர் பாண்டியராஜ்

தமிழ் சினிமாவில் குழந்தைகளை மையமாக வைத்து வெளியாக்கிய பல திரைப்படங்கள் ஹிட் அடித்துள்ளது அந்த வகையில் குழந்தைகளை வைத்து பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படத்தை கொடுத்தவர் இயக்குனர் பாண்டிராஜ் இவர் தற்பொழுது தமிழில் கூட்டுக் குடும்பத்தை வைத்து திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டு வருகிறார்.

இயக்குனர் பாண்டி ராஜ் அடிக்கடி பிரபல youtube சேனலுக்கு பேட்டியை கொடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார் அந்த வகையில் பசங்க திரைப்படத்தை பற்றி பேசினார் அப்பொழுது அவர் கூறிய தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது ஏனென்றால் பசங்க திரைப்படத்திற்காக 27 தயாரிப்பாளர்களிடம் கதையை கூறியதாக பகிர் தகவலை பகிர்ந்துள்ளார்.

இயக்குனர் பாண்டிராஜ் சிம்பு தேவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்  அதன் பிறகு பசங்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே குழந்தைகளுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை இயக்கி மிகவும் பிரபலம் அடைந்தார். மேலும் தேசிய விருது ஆகியவற்றை பெற்றார். இதனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

அதேபோல் இவர் இயக்கும் திரைப்படங்கள் குடும்ப உறவுகளை வைத்து கூட்டு குடும்பமாக இருப்பது போல் எடுத்து வருகிறார். அந்த வகையில் கார்த்தி நடிப்பில் வெளியாகிய கடைக்குட்டி சிங்கம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்திலும் குடும்ப செண்டிமெண்ட் வைத்து திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

கடைசியாக சூர்யாவை வைத்து எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை இயக்கி இருந்தார் இந்த திரைப்படமும் ரசிகர்களிடம் ஓரளவு நல்ல விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் பாண்டிராஜ் பிரபல தனியார் youtube சேனலுக்கு பேட்டி ஒன்றை கொடுத்தார் அந்த பேட்டியில் தமிழ் சினிமாவில் குழந்தைகளை பற்றி எடுக்கும் படம் மிகக்குறைந்த வரவேற்பை பெறும் என்பதால்தயாரிப்பாளர்கள் முன் வரவில்லை.

அந்த வகையில் கிட்டத்தட்ட 27 தயாரிப்பாளர்களிடம் கதையை கூறியுள்ளேன் பெரும்பாலும்   நான் கதை கூறியவர்கள் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களாக இருக்கக்கூடியவர்கள். யாருமே பசங்க திரைப்படத்தை தயாரிக்க முன் வரவில்லை. இயக்குனர் சசிகுமார் தான் பசங்க திரைப்படத்தை தயாரிக்க முன் வந்தார் ஆனால் அந்த சமயத்தில் சசிகுமார் பெரிய இயக்குனராகவும் மிகப்பெரிய நடிகராகவும் இல்லை.

எல்லார்கிட்டயும் கேட்டு பாத்துட்டோம் ஒரு முறை சசிகுமார் சாரிடம் கேட்டுப் பார்க்கலாம் என ட்ரை பண்ணினேன் சசிகுமார் அவர்களிடம் கதையை கூறினேன் அவர்களும் பசங்க படத்தை தயாரிக்க முன் வந்தார் இந்த தகவலை பிரபல யூட்யூப் சேனலுக்கு பாண்டியராஜ் அவர்கள் கூறியுள்ளார்.

Leave a Comment