ரொம்ப கஷ்டப்படாதீங்க மாமா எல்லாமே சீக்கிரம் முடிந்துவிடும்.! மீனா கண் முன்னே ஜனார்த்தனனை மிரட்டும் பிரசாந்த்.!

Pandian stores : பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய முழு எபிசோடில் முல்லை மீனா பேசியதை நினைத்து அழுது கொண்டிருக்கிறார் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி புலம்புகிறார் அதுமட்டுமில்லாமல் அவங்க அவங்களுக்குன்னு இதுவரைக்கும் எதுவுமே செஞ்சதில்ல வீட்டோட நல்லதுக்கு தானே எல்லாத்தையும் செஞ்சிருக்காங்க அவங்கள போய் இப்படி தப்பா நினைக்கிறாங்களே மீனா என அழுகிறார்.

உடனே மூர்த்தி வெடுக்கு வெடுக்குன்னு மீனா பேசுவா மனசுல ஒன்னு இருக்காது என தனம் பேச அதுக்குன்னு அவங்கள கொலைகாரன்னு சொல்லவங்களா. ஜீவா மாமா வீட்டை விட்டு போன பிறகு எவ்வளவு அழுதாங்க தெரியுமா கதிர் ஜீவா வீட்டுக்கு வந்ததும்  எவ்வளவு சந்தோஷப்பட்டார் தெரியுமா அவ்வளவு பாசம் வைத்திருக்கிறார் அவர போய் இப்படி சொல்லிட்டாங்களே ஜீவா மாமாவோட அவரும் தானா ஜெயில்ல இருக்காரு எனக்கு கஷ்டமா இருக்காதா என பேசுகிறார்.

அடுத்த காட்சியில் மூர்த்தி தன்னுடைய மாமாவிடம் வீட்டு நிலமையை சொல்லி அழுது கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் நம்ம குடும்பத்துல யாருக்கும் யாரும் துரோகம் செஞ்சதில்லையே மாமா என் குடும்பத்துக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது ஒரு வாரம் கூட நிம்மதியா சந்தோஷமா இருக்க முடியல நான் ஆசை ஆசையா வளர்த்த தம்பி இப்ப ஜெயில்ல இருக்காங்க தானத்துக்கு சரியாயிடுச்சு இனிமையாவது நல்லா இருக்கலாம் நினைச்சா இப்ப ரெண்டு தம்பியும் ஜெயில்ல இருக்காங்க என அழுது கொண்டிருக்கிறார்.

ஹாஸ்பிட்டலில் இருக்கும் ஜனார்த்தனன் அவர்களை டாக்டர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது மீனாவும் இருக்கிறார் அந்த சமயத்தில் பிரசாந்த் வந்து நான் கூட பரவால்ல எனக்கு கைல தான் அது இல்லனா கூட கூட எல்லாம் பிரச்சனையே இல்ல ஆனா மாமாவை இப்படி அடிச்சுட்டாங்களே நான் வேற கதிர் ஜீவா மேல வாக்குமூலம் கொடுத்துட்டேன் அதை நீங்க தப்பா எடுத்துக்காதீங்க நான் பார்த்தது தான் சொன்னேன் மீனாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.

காலையில எதுவும் சொல்ல முடியாம இருந்துச்சு ஆனா இப்ப 10% வாய்ப்பு இருக்கு கண்டிப்பா ஒரு சரி ஆயிடுவாரு என்பது போல் டாக்டர் சொல்ல பிரசாந்த் பதறி அடித்து என்ன சொல்றீங்க என அதிர்ச்சி அடைகிறார். பிறகு ஏதேதோ சொல்லி சமாளித்துக் கொண்டிருக்கிறார் மீனாவுக்கு பிரசாந்த் மீது லைட் ஆக சந்தேகம் வருகிறது. பிரசாந்த் தன்னுடைய அறைக்கு போய் ஜனார்த்தனன் கண் முழிச்சா நம்ம மாட்டிப்போமே என புலம்புகிறார்.

ஜனார்த்தனன் கண் முழிக்கவே விட கூடாது அவரை இங்கேயே போட்டு தள்ளனும் என பிளான் பண்ணுகிறார். அடுத்த காட்சியில் மீனாவிடம் மெடிசனை வாங்கி வர சொல்கிறார் நர்ஸ் அந்த சமயத்தில் பிரசாந்த் ஜனார்த்தனனை போட்டு தள்ள கத்திரிக்கோலை எடுக்கிறார் ஆனால் கத்திரிக்கோலை வைத்து கொலை செய்தால் மாட்டிக் கொள்வோம் என எண்ணி அதை வைத்து விடுகிறார்.

பிறகு ஆக்சிஜன் செல்லும் மாஸ் கை  முகத்தில் இருந்து எடுக்க முயற்சி செய்கிறார் அந்த சமயத்தில் மீனா வந்து விடுகிறார் என்ன இங்க செய்கிறீர்கள் என கேட்க நீங்க யாருமே இல்லையா அதனால மாமாவுக்கு துணையாக இருக்கிறேன் என பேசுகிறார். ரொம்ப கஷ்டப்படாதீங்க மாமா சீக்கிரம் எல்லாமே முடிஞ்சிடும் என ஜனார்த்தனனை பார்த்து கூறுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்