தலை கூட நிக்கல.. பிறந்து 41 நாட்களிலேயே நடிக்க வந்த பிரபல நடிகை.! ஆனால் 40 வயதாகியும் பிரபலமாக இருக்கும் நடிகை

Pandian stores sujitha : பொதுவாக குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பிக்கும் நடிகைகள் மற்றும் நடிகர்கள் மூன்று அல்லது நான்கு வயது இருக்கும். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் அந்த வகையில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான அஞ்சலி திரைப்படத்தில் ஷாலினி மூன்று வயதில் தான் நடிக்க ஆரம்பித்தார் அவருக்கு நடிப்பு சொல்லி கொடுக்க மணிரத்தினம் படாத பாடுபட்டதாக கூறினார்கள்.

அப்படி இருக்கும் நிலையில் பிறந்த 41 நாட்கள் மட்டுமே ஆன நிலையில் நடிக்க வந்த குழந்தை இன்று 40 வருடங்கள் ஆகியும் பிரபலமாக இருந்து வருகிறார் அவரைப் பற்றி இங்கே காணலாம்.

41 நாட்களிலேயே நடிக்க வந்த நடிகை வேறு யாரும் கிடையாது பாண்டியன் ஸ்டோர் சுஜிதா தான். இவர் குறிப்பாக தொலைக்காட்சி தொடர்களில் தான் அதிகமாக நடித்து வருகிறார் அதிலும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மிகவும் பரபரப்பாக நடித்த கொண்டிருக்கிறார் சினிமாவில் முதன்முதலாக,  பிறந்து 41 நாட்கள் ஆன நிலையில் அப்பாஸ் என்ற திரைப்படத்தில் நடித்தார் இந்த திரைப்படத்தில் கே ஆர் விஜயா அவர்களுக்கு பேதியாக நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து சுஜிதா பாக்கியராஜ் எழுதி இயக்கி நடித்த முந்தானை முடிச்சு திரைப்படத்தில் ஊர்வசி கையில் தூக்கி வைத்திருக்கும் குழந்தை தான் சுஜிதா இந்த திரைப்படத்தில் குழந்தையாக நடித்த சுஜிதாவை ஊர்வசி ஒரு சில காரணங்களால் தாண்ட வேண்டும் அந்த காட்சியில் உண்மையாலும் குழந்தையை போட்டு  தாண்டுவார் ஆனால் அதன் பிறகு பல பிரார்த்தனைகள் செய்வார்.

அது மட்டும் இல்லாமல் குழந்தைக்கு எதுவும் ஆகக்கூடாது என சில பரிகாரங்களையும் செய்தார்கள் தமிழை தாண்டி சுஜிதா மலையாள திரைப்படத்திலும் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக மட்டுமல்லாமல் தங்கையாகவும், மகளாகவும் ஒரு சில திரைப்படங்களில் நடித்தார் என்னதான் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தாலும் இவருக்கு திரையுலகை காட்டிலும் சின்னத்திரையில் அதிக வரவேற்பு கிடைத்தது.

முதன்முதலாக தூர்தர்ஷனில் வெளியான ஒரு பெண்ணின் கதை என்ற சீரியலில் தான் நடித்து வந்தார். அதன் பிறகு ராஜ் தொலைக்காட்சியில் கங்கா யமுனா சரஸ்வதி என்ற தொடரிலும் நடித்தார். இந்த சீரியல் ஒவ்வொரு வாரமும் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தது இதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் உருவங்கள் சீரியலிலும் பூக்காலம் என்ற தொடரிலும் நடித்து வந்தார். இந்த நிலையில் தற்போது விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர் என்ற பரபரப்பான சீரியலில் தனலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

விஜய் தொலைக்காட்சியில் மூர்த்திக்கு மனைவியாக நடித்து வருகிறார் பிறந்த 41 நாட்களிலேயே நடிக்க ஆரம்பித்த இவர் 40 வயதை தாண்டியும் இன்னும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக பலருக்கு குரல் கொடுத்துள்ளார் அந்த வகையில் மாஸ்டர் திரைப்படத்தில் மலையாள டப்பிங் இல் மாளவிகா அவர்களுக்கு பின்னணி குரல் கொடுத்தவர் இவர்தான்.

sujitha
sujitha