ஜீவாவை அடிக்க சொன்ன ஜனார்த்தனன்.! போட்டுக் கொடுத்த பிரசாந்த்.! வீட்டிற்கு சென்று மிரட்டும் கதிர்.! பாண்டியன் ஸ்டோர் பரபரப்பான எபிசோட்.

pandian stores september 14 promo

Pandian stores : விஜய் தொலைக்காட்சியில் நீண்ட காலமாக ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சமீப காலமாக இந்த சீரியலில் சுவாரஸ்யம் இல்லாமல் இருந்து வருகிறது. அது மட்டும் இல்லாமல் இந்த சீரியல் விரைவில் முடியப்போவதாக பலரும் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர் குடும்பம் அனைவரும் புதிய வீட்டிற்கு சென்றுள்ளார்கள்.

புதிய வீட்டில் ஒரே மாதத்தில் கரண்ட் பில் எகிறியதால் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள் இதனால் மூர்த்தி கண்ணனை அர்த்த ராத்திரியில் எழுப்பி ஏசியை ஆப் செய்து விடு கரண்ட் பில் ஓவராக வருகிறது அதும் இல்லாமல் ஏசி காத்து குழந்தைகளுக்கு நல்லது கிடையாது என கூறுகிறார்.

அப்படி இருக்கையில் தற்பொழுது ஒரு ப்ரோமோ வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் பிரசாந்த் காரை மடக்கி ஜீவா மாமாவை ஏமாத்தாத எனக் கூறுகிறார். அதற்கு பிரசாந்த் அப்படிதாண்டா ஏமாற்றுவேன் உன்னால என்ன பண்ண முடியும் என பிடித்து தள்ளி விடுகிறார். பதிலுக்கு ஜீவாவும் பிரசாந்தை தள்ளி விடுகிறார் உடனே பிரசாந்த் ஜீவாவை அடிக்க கை ஓங்குகிறார் அந்த சமயத்தில் கதிர் வந்து நிற்கிறார்.

கதிரை பார்த்த பிரசாந்த் கையை கீழே போடுகிறார் உடனே கதிர் என் அண்ணன் மேலேயே கை வைக்க வந்துட்டியா என பிரசாந்தை புரட்டி எடுக்கிறார். உடனே பிரசாந்த் நீ இப்படியே பேசிக்கிட்டு இரு உன்னை அடிக்க சொன்னது ஜனார்த்தனன் தான் என உண்மையை கூறிவிடுகிறார் உடனே கதிர் கோபப்பட்டு ஜனார்த்தனன் வீட்டிற்கு கிளம்புகிறார்.

தன்னுடைய அண்ணனையும் அழைத்துக் கொண்டு ஜனார்த்தனன் வீட்டிற்கு சென்ற கதிர் உன் புருஷனும் இல்ல உங்க மாப்பிள்ளையோ என் அண்ணன் மேல கைய வச்சா வெட்டி கூறு போட்டு விடுவேன் என மிரட்டி விட்டு செல்கிறார் இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது.