சீரியலில் மட்டுமல்ல நிஜத்திலும் அம்மாவாகப் போகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா.!! வைரலாகும் புகைப்படம்.

0

Pandian Stores Meena who is not only conceive in serial but in real too!! The photo is viral: விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ஹேமா. இவர் இதற்கு முன் சைதாப்பேட்டை காவல் துறையில் ஹார்ட்வேர் இன்ஜினியர் ஆக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இவர் எம்.சி.எ படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு சிறு வயதிலிருந்தே நடிப்பதில் ஆர்வம் அதிகம் இருந்தது. எனவே இவர் முதலில் பிரபல சேனல்களில் செய்தி வாசிப்பாளராக தனது பணியை துவங்கினார். பின்னர் அதைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய குலதெய்வம், மெல்ல திறந்த கதவு, சின்னத்தம்பி போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார்.

அதனைதொடர்ந்து தற்போது பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரமான மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த சீரியலில் அவர் கர்ப்பமாக உள்ளார். மேலும் இந்த கதாபாத்திரத்தின் மூலம் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது அனைவரும் அறிந்ததே.

சமீபத்தில் இவர் சமூக வலைதளங்களில் தனது ரசிகர்களுடன் நேரலையில் கலந்துரையாடலில் ஈடுபட்டார். அப்போது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார். தொடர்ந்து பல ரசிகர்கள் ஏதேனும் நல்ல செய்தி உள்ளதா என கேட்டனர். அதற்கு ரசிகர்களுக்கு அவர் 5 மாதம் கர்ப்பமாக உள்ளதாக பதில் அளித்துள்ளார். இதனை அறிந்த அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

pandiyanstore meena
pandiyanstore meena
hema-tamil360newz
hema-tamil360newz