பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகிய மேலும் ஒரு பிரபலம்.! அவர் அம்மாவே கூறிய தகவல்.. என்ட்ரி கொடுக்கும் அக்கா

pandiyan-stores-002
pandiyan-stores-002

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் அறிமுகமாகி நான்கு வருடங்களுக்கு மேலாக மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதாவது 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி அன்று தொடங்கப்பட்ட இந்த சீரியல் இதுவரையிலும் 1200 எபிசோடுகளையும் தாண்டி டாப் சீரியல்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

மக்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் டிஆர்பி யில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் முன்னணி வகித்துள்ளது. கூட்டுக் குடும்பத்தினை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருவதால் இல்லத்தரசிகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்திருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியல் சில மாதங்களாக விரைவில் முடியவுக்கு வர போவதாக கூறப்படுகிறது.

ஆனால் இதுவரையிலும் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை இதனை அடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா கேரக்டரில் நடித்து வரும் வெங்கட் நான்கு அண்ணன் தம்பிகளும் மீண்டும் ஒன்றினையும் பொழுது இந்த சீரியல் நிறைவடையும் என கூறியுள்ளார். அப்படி பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வரும் நான்கு அண்ணன் தம்பிகளும் ஒன்று சேர்வது போல் கதை அமைய இருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில் இந்த சீரியலில் இருந்து திடீரென முக்கிய பிரபலம் ஒருவர் விலகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது அந்த வகையில் தனம், மீனா, முல்லை, ஐஸ்வர்யாவை விட அதிக ரசிகர்களைக் கொண்ட குழந்தை நட்சத்திரம் தான் கயல் பாப்பா. இவர் தொடரை விட்டு விலகி இருக்கிறாராம் கயலின் உண்மையான பெயர் ஹாஷினி.

சீரியலில் மிகவும் க்யூட்டாக நடித்து ஒரு குழந்தை கயலின் அம்மா பேட்டியில் ஹாசினி தொடரில் இருந்து வெளியேறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அவருக்கு பதில் அவரது அக்காவை நடிக்க கேட்டுள்ளார்கள் நாங்களும் சரி என்று கூறி இருக்கிறோம் கயலின் அக்காவும் நடிப்பதற்கு ரொம்ப ஆர்வமாக இருக்கிறார் என தெரிவித்துள்ளார். க்யூட்டான கயல் பாப்பா சீரியலில் இருந்து விலகி இருப்பது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.