பல லட்சம் செலவில் பிரம்மாண்ட வீட்டைக் கட்டிவுள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்.! வைரல் புகைப்படம்..

தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தொடர்ந்து பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், துணை நடிகையாகவும் நடித்து பிரபலமானவர் தான் நடிகை சுஜிதா. இவ்வாறு திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்கு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சொல்லும் அளவிற்கு பல வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சீரியல்களில் நடிக்க தொடங்கினார்

மேலும் மறுபுறம் நடிப்பது மட்டுமல்லாமல் பல மலையாள நடிகைகளுக்கு டப்பிங் கூட பேசி வருகிறார் என்னதான் இவ்வாறு இவற்றை செய்து வந்தாலும் கூட விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான் இவருக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய ரீச்சினை பெற்று தந்தது. அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் என்ற கேரக்டரில் மூத்த அண்ணியாக நடித்து வருகிறார்.

இதன் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. இந்த சீரியலில் தன்னுடைய கணவரின் தம்பிகளுக்காக குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருந்து வரும் தனம் வயதான பிறகு ஆண் குழந்தைக்கு அம்மாவாகிறார். தற்பொழுது மீண்டும் கர்ப்பமாக இருக்கும் நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தையே தாங்கி வருகிறார்.

sujitha 2

எனவே இவருக்கு குடும்ப இளவரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவ்வாறு சீரியலில் நடித்து ஒருபுறம் பிசியாக இருந்து வந்தாலும் மறுபுறம் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் அந்த வகையில் தன்னுடைய அன்றாட வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை நான் வீடியோவாக வெளியிட்டு வரும் இவர் தன்னுடைய க்யூட்டான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

sujitha

இந்நிலையில் சமீபத்தில் சுஜிதா புது வீடு கட்டிருக்கும் நிலையில் கிரகப்பிரவேசம் இன்று நடைபெற்று முடிந்திருக்கிறது எனவே சுஜிதா அவரது கணவர் மற்றும் மகனுடன் புது வீட்டில் குடியேறியிருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்ய அது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

sujitha1

Leave a Comment

Exit mobile version