பிரசாந்த் எங்க அண்ணனை இனிமே அடிக்க வந்தா வெட்டிப் போட்டுருவேன் ஜனார்த்தனன் மனைவியிடம் சொன்ன கதிர் – பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோடு

Pandian stores september 18
Pandian stores september 18

Pandian stores september 18 :  இன்றைய எபிசோடில் கதிரும், ஜீவாவும் ஜனார்த்தனன் வீட்டிற்கு போய் மீனா அவங்க அம்மாவிடம் எங்க உங்க வீட்டுக்காரர் என்று கேட்க அவர் வெளியே போயிருக்காரு என சொல்வதும் நீங்க ஏமாந்துறக் கூடாதுன்னு அக்கரைல பேச வந்தா எங்க அண்ணனை ஆளு வச்சி அடிப்பீங்களா..

பிரசாந்த் எங்க அண்ணன அடிக்க வரான் என்று கேட்க நீங்க பிரசாந்த் மாப்பிள்ளை கிட்ட ஏதாவது பிரச்சனை பண்ணீங்களா என்று மீனாவுடைய அம்மா ஜீவா கிட்ட கேட்கின்றார். பிறகு கதிர் இதுக்கு மேல உங்க புருஷனும், உங்க சின்ன மருமகனோ எங்க அண்ணனை ஏதாவது சொன்னா வெட்டிப்போட்டுட்டு ஜெயிலுக்கு போயிடுவேன்..

யோசிக்கவே மாட்டேன் என கதிர் கோபப்பட்டு பேசிட்டு போகிறார் பிறகு பாண்டியன் ஸ்டோர் வீட்டில் மூர்த்தி வீட்டிற்கு வரும்போது பேன் தனியாக ஓடிக் கொண்டிருக்கிறது அதைப் பார்த்து யாரும் இல்லாமல் ஃபேன் தனியா ஓடுது கரண்ட் பில் யாரு கட்டுவது என்று ஃபேனை ஆஃப் பண்ணுகிறார்.. அப்பொழுது தனம் வந்து இங்கதான் உட்கார்ந்து இருக்கோம் இப்பதான் போனோம் என்று சொல்கிறார்.

பிறகு ஏசி காத்தோட இயற்கை காற்று எவ்வளவு சூப்பரா இருக்கு ஏசி அதிகமா போடாதீங்க என்று சொல்கிறார் அதற்கு தனம் யூஸ் பண்ணலனா வீணா போயிடும் என்று சொல்ல அதுக்காக வேணும்னா ஒரு நாளைக்கு அஞ்சு நிமிஷமோ இல்ல பத்து நிமிஷமோ மட்டும் போட்டுக்கோங்க.

வேணும்னா எல்லாரும் ஒரே ரூம்ல ஏசி போட்டுட்டு கதை பேசிக்கிட்டே தூங்கலாமா என்று கேட்க ஒரே ரூமில் இருந்து இடம் பத்தவில்லை என்பதால் தானே புது வீட்டுக்கு வந்தோம் இங்க வந்தும் ஒரே ரூம்ல இருக்கலாம் என்றால் என்ன மாமா என்று எல்லோரும் கேட்கின்றனர்.. பிறகு வேணுன்னா குழந்தைகளை மட்டும் தனம் ரூம்ல ஏசி போட்டு தூங்க வைங்க..

நீங்க எல்லாம் ஏசி போடாதீங்க வேணும்னா ஜன்னலை திறந்து வச்சுட்டு தூங்குங்க என்று சொல்ல மீனா ஜன்னலை தொறந்தா கொசு நிறைய வருது என்று சொல்வதும் அதற்கு வலை வேணும்னா போட்டுக்கலாமா என மூர்த்தி கேட்க நாங்க ஏசி போடாமலே தூங்குகிறோம் என்று மீனா சொல்கிறார்.. பிறகு எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அப்ப கதிரும் ஜீவாவும் வீட்டிற்கு வருகின்றனர் ரெண்டு பேரும் ஒண்ணா வீட்டுக்கு வரீங்க என்று கேட்க கதிர் பிரச்சனை வேணாம்னு ஒதுங்கி போனா திரும்பத் திரும்ப வந்து பிரச்சினை பண்றாங்க.. மீனா உங்க அப்பா பிரசாந்த வச்சு ஜீவா அண்ணன அடிக்க சொல்லி இருக்காங்க என்று சொல்ல மீனா அப்படியெல்லாம் அப்பா பண்றவர் இல்லையே என கேட்கிறார் பிறகு நடந்தவற்றை எல்லாம் ஜீவா எடுத்துச் சொல்கிறார்..

இதைக் கேட்டு தனம் இதுல ஏதோ தப்பு இருக்கு உங்க மாமனார் அப்படி பண்றவர் இல்ல இந்த பிரசாந்த் தான் நடுவில் வந்து இப்படி பண்றார் என்று சொல்ல அவன் ஆரம்பத்தில் இருந்தே இப்படித்தான் பண்ணிட்டு இருக்கான் அவன் தான் இப்படி பண்றானா உங்க அப்பாவுக்கு அறிவில்லையாங்க..

Pandian stores september 18
Pandian stores september 18

சொந்தமா பிசினஸ் பண்றாரு சுயபுத்தி கூட இல்லையா என்று கதிர் மீனாவிடம் சொல்லிவிட்டு பிறகு எனக்கு என் குடும்பம் தான் முக்கியம். இனிமே பிரசாந்தோ இல்ல உங்க அப்பா யாராவது பிரச்சன பண்ணாங்கன்னா தொலைச்சிடுவேன் என்று கதிர் கோபமாக பேசிவிட்டு போகிறார்.. மீனா இதை நம்ப முடியாமல் ஷாக் ஆகி நிற்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.