பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சமீபத்திய எபிசோடில் ராஜி டியூஷன் எடுக்க முடிவு செய்துள்ளதை எப்படியாவது பாண்டியனிடம் போட்டு கொடுத்து அதனை நிறுத்த முடிவு செய்துள்ளார் மயில் நாசுக்காக போட்டுவிட்டு வீட்டில் ஒரு பிரளயத்தை ஏற்படுத்தி விடுகிறார், பாண்டியன் மயில் சொன்னதை கேட்டுகிட்டு மீனா மற்றும் ராஜியை கண்டபடி திட்டி விடுகிறார்.
மீனா மற்றும் ராஜி இருவரும் கோபித்துக் கொண்டிருப்பதால் மீண்டும் பாண்டியன் தின்ப்பண்டத்தை வாங்கி கொடுத்து அவர்களை சமாதானப்படுத்துகிறார் அடுத்த நாள் கதிர் நீண்ட நேரம் ஆகி எழுந்து வருவதால் இனிமேல் சாப்பாடு கொடுக்கும் வேலைக்கு போக வேண்டாம் ஒழுங்கா காலேஜை முடித்துவிட்டு என் கடையில் வந்து வேலையை பார்க்க சொல்.
அதுவரைக்கும் ஆகும் செலவை நானே ஏற்றுக்கொள்கிறேன் அந்த புள்ள செலவையும் நானே ஏற்றுக்கொள்கிறேன் என பாண்டியன் கூற கதிர் அதெல்லாம் முடியாது வீட்டுலேயும் அசிங்கப்பட்டுவிட்டு கடையிலும் வந்து என்னால் அசிங்கப்பட முடியாது எனக் கூற பாண்டியனுக்கு ரோசம் வந்து கதிரை செவுலில் அரைக்கிறார்.
அடி வாங்கிக் கொண்டு இருக்க கதிரின் மாமாவும் பாண்டியனும் செல்லும் பொழுது அந்த புள்ள முன்னாடியே இப்படி அடிக்கிறியே மச்சான் அந்த புள்ள இனிமே கதிர மதிக்குமா இந்த மாதிரி அடிக்கலாமா என ிுரை கூறிக் கொண்டே போகிறார் இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் அண்ணன் தம்பி அனைவரும் மொட்டை மாடியில் படுத்து கொள்ள திடீரென தங்கமயில் ரூமுக்கு அழைக்கிறார்.
நீ போ மயில் நான் வருகிறேன் என சொல்லிவிட்டு சரவணன் அங்கேயே தூங்கி விடுகிறார் நீண்ட நேரம் காத்திருந்த தங்கமயில் விடியகாலையில் தூங்கி விடுகிறார் அதுமட்டுமில்லாமல் சரவணன் அவ்வளவு எழுப்பியும் எழுந்திரிக்காமல் ஒரு நாடகத்தை போடுகிறார். சரவணன் அதிகாலையில் எழுப்பிடாமல் ஆபீசுக்கு கிளம்பி விடுகிறார்.
ஆனால் மதியம் சாப்பாடு எடுத்துக்கொண்டு வரவில்லை தங்கமயில் இதனால் சரவணன் வீட்டிற்கு வந்து தங்கமயிலிடம் என்ன ஆச்சு என கேட்க என் மேல உங்களுக்கு அக்கறையே கிடையாது பாசமே கிடையாது என ஆக்டிங் போடுகிறார் உன் மேல எனக்கு பாசம் இருக்கு என்பதை எப்படி நிரூபிக்க வேண்டும் என கேட்க ஹனிமூன் போக வேண்டும் அதற்கு நீங்கள் அழைத்துக் கொண்டு போக வேண்டும் என கூறுகிறார் இதனால் சரவணன் அதிர்ச்சடைகிறார் இத்துடன் ப்ரோமோ முடிகிறது.