பிரசாந்த் முன்பே அசிங்கப்படுத்தும் ஜனார்த்தனன்.! பொறுத்தது போதும் என பொங்கி எழுந்த ஜீவா.! பாண்டியன் ஸ்டோர் எபிசோட்…

0
pandian-store-episode-may-20
pandian-store-episode-may-20

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்றைய எபிசோடில் மூர்த்தி இளநீர் குடித்து கொண்டு இருக்கிறார் அப்பொழுது ஜீவா அண்ணனை பார்த்தவுடன் வண்டியை நிறுத்திவிட்டு கிட்டக்கே வருகிறார். அப்பொழுது இளநி குடித்துக் கொண்டிருந்த மூர்த்தி ஜீவாவை பார்க்கிறார் அது மட்டும் இல்லாமல் இளநீர் வெட்டுபவர் ஜீவாவையும் அழைக்கிறார். ஆனால் மூர்த்தி பணத்தை கொடுத்து விட்டு கிளம்பும் நேரத்தில் தம்பி வந்திருக்கிறார் பேசாம போகிறீர்களே என கூற உடனே மூர்த்தி யாருக்கு யாருக்கு அண்ணன் யாருக்கு யாரு தம்பி அந்த உறவு எல்லாம் அப்பவே முடிஞ்சிடுச்சு என மூர்த்தி கூறிவிட்டு கிளம்புகிறார்.

வீட்டிற்கு வந்த ஜீவா தன்னுடைய மனைவி மீனாவிடம் நடந்ததை கூறி வருத்தப்படுகிறார். அது மட்டும் இல்லாமல் நீ அவ்வளவு சண்டை பிடித்த உன் மேல தான் அவங்களுக்கு கோவம் கிடையாது ஆனா என் மேல மட்டும் கோபமா என கேட்கிறார் ஜீவா, உடனே மீனா அதெல்லாம் சரி ஆயிடும் விடு உன்ன பிரஷாந்த் கூப்பிட்டார் என கூறிவிட்டு கிளம்புகிறார்.

அடுத்த காட்சியில் ஜீவா மாமனார் மற்றும் சகலை இருக்கும் இடத்திற்கு செல்கிறார்கள் அப்புறம் மூவரும் குடிகிரார்கள் இதனை பார்த்து மீனா கடுப்பாகிறார். பின்பு அடுத்த நாள் காலையில் அனைவரும் அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஜீவா முன்பே பிரஷாந்தை புகழ்ந்து பேசுகிறார் ஜனார்த்தனன் இது ஜீவாவிற்கு செம கடுப்பாகிறது. அது மட்டும் இல்லாமல் நிலா பாப்பா வந்ததும் எல்கேஜி சேர்க்கலாமா என பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஜனார்த்தனன் ஆமாம் மாப்பிள்ளை சேர்க்கணும் எனக் கூறுகிறார்.

பிறகு கயல் பாப்பாவை திருச்சியில் சேர்த்து விடலாம் என நினைக்கிறேன் என ஜனார்த்தனன் கூறியவுடன். ஜீவா சட்டு என்று எழுந்து போன் வருகிறது என கோபமாக கிளம்பி விடுகிறார். அடுத்த காட்சியில் ஜீவா ஜனார்த்தனனிடம் கயல் பாப்பாவ ஸ்கூல்ல சேர்க்கறவரைக்கும் உங்க இஷ்டத்துக்கு தான் முடிவு எடுக்குறீங்க தயவுசெஞ்சு என்ன அப்பாவா இருக்க விடுங்க கயல் விஷயத்துல மட்டும் என்னையும் மீனாவையும் தாண்டி நீங்க எந்த முடிவும் எடுக்காதீங்க என திட்டவட்டமாக கூறிவிட்டு வெளியே செல்கிறார்.

உடனே மீனாவை அவருடைய அம்மா ஜீவா அப்பாவிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார் என அழைத்துக் கொண்டு வருகிறார் அப்பொழுது ஜீவா பேசியதை கேட்டுக் கொண்டிருக்கிறார் மீனா ஜீவா போன பிறகு தயவு செஞ்சு எதெல்லாம் நடக்க கூடாது நினைச்சேனோ அதெல்லாம் நடக்க வச்சிடாதீங்கப்பா அப்புறம் ஜீவா இங்கே இருக்கிறத விட அங்க இருக்கிறது நமக்கு நல்லது என முடிவு எடுக்க வச்சிடாதீங்க கூறிவிட்டு செல்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது