விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்றைய எபிசோடில் தனம் மற்றும் மூர்த்தி வீட்டை விட்டு கிளம்புவதற்கு ரெடி ஆகிறார்கள் அப்பொழுது முல்லை மற்றும் கதிர் எங்க போறீங்க எதுக்காக போறீங்க என கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு தனம் எங்க அம்மா வீட்டுக்கு போறோம் எனக் கூற கதிர் உடனே அண்ணன் எப்படி இதுக்கு சம்மதித்தார் என கேள்வி எழுப்புகிறார்.
அது மட்டும் இல்லாமல் இதில் ஏதோ தப்பு இருக்கிறது எனவும் கூறுகிறார் இந்த சமயத்தில் முல்லை எங்க அம்மா ஏதாவது சொல்லுச்சா எனக் கேட்க அதெல்லாம் எதுவும் கிடையாது என தனம் கூற முல்லை தனத்தின் கையை பிடித்து தன் தலை மீது சத்தியம் பண்ணி எங்கேயும் போகக்கூடாது எனக் கூறுகிறார். அதே போல் கதிர் தன்னுடைய அண்ணன் கையை பிடித்து தன் தலை மீது அடித்து சத்தியம் வாங்கி போகக்கூடாது எனக் கூறுகிறார்.
இப்படியே இருக்க முல்லையின் அம்மா வெளியே உட்கார்ந்து கொண்டிருக்கிறார் அவரிடம் வந்து முல்லை நீ ஏதாவது அக்காவை பத்தி ஏதாவது சொன்னியா எனக் கேட்க அதற்கு முல்லையின் அம்மா நான் என்ன சொல்ல போறேன் என கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் கதிரும் இதே கேள்வியை கேட்க முல்லையின் அம்மா நீங்களும் என்ன மாப்ள இப்படி கேக்குறீங்க என கேட்கிறார்.
ஆனால் முல்லை துருவி துருவி கேள்வி கேட்கும் பொழுது அவங்க தான் கிளம்புறாங்களா போனா போகட்டும் என ஒரு வார்த்தையை விட்டு விடுகிறார். இதை கவனித்த முல்லை மற்றும் கதிர் அப்ப நீங்க தான் ஏதோ சொல்லி இருக்கீங்க என கேட்க பிறகு நடந்ததை முல்லையின் அம்மா கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் இரண்டு புள்ளதாச்சிகள் ஒரே வீட்டில் இருக்கக் கூடாது என்பதை தான் கூறினேன் என சொல்கிறார்.
இதற்கு கோவப்பட்ட முல்லை அதெல்லாம் சொல்வதற்கு நீங்க யாரு முதல நீ வீட்டுக்கு கெளம்பு இங்க இருக்கவே கூடாது என முல்லை அவரின் அம்மாவை பார்த்து கூறுகிறார். உள்ளே துணி மணியை எடுக்க சென்ற முல்லையின் அம்மா அங்கு தனத்திடம் இப்ப நல்லா இருக்கா நீ ஏற்றிவிட்டு நல்லா வேலை பாக்குற. உன்னை வீட்டுக்கு தானே கிளம்ப சொன்ன ஆனா என்னையவே கிளம்ப வச்சிட்டியா என பேசிக் கொண்டிருக்கிறார்.
அந்த சமயத்தில் முல்லை வந்து எதுவும் பேசாத அம்மா நீ பஸ்ட் கிளம்பு எனக் கூறிக் கொண்டிருக்கிறார் நீ பின்னாடி இருந்து தூண்டி விட்டுட்டு நல்லா வேலை பாக்குற தானம் என தனத்தை பார்த்து முல்லையின் அம்மா கூற உடனே கதிர் வந்து எதுவும் பேசாமல் கிளம்புறீங்கனா கிளம்புங்க என மூஞ்சில அடித்தது போல் கூறி விடுகிறார். அடுத்த காட்சியில் கண்ணன் ஐஸ்வர்யா உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது ஐஸ்வர்யாவின் சித்தி வருகிறார் அவரிடம் ஐஸ் வைத்து பணம் கேட்கிறார் ஐஸ் அதற்கு ஒரே வார்த்தையில் அவரின் சித்தி நான் அப்படியே பணம் வாங்கி கொடுத்தாலும் அதை எப்படி நீங்க அடைப்பீங்க என கேட்டு அசிங்க படுத்துகிறார் இத்துடன் இன்றைய எபிசோட் முடிகிறது.