கண்ணனை கடனில் தத்தளிக்க வைத்த ஐஸ்வர்யா.! வீட்டு வாசலில் கடன்காரர்கள்.! மீண்டும் ஜீவாவை பங்கமாக அசிங்கப்படுத்தும் ஜனார்தனன்.. இன்றைய முழு எபிசோட்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் ஒவ்வொரு சீரியலும் ரசிகர் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்துள்ளது. அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்களிடையே நன்கு பிரபலம் அடைந்துள்ளது, இந்த நிலையில் இன்றைய எபிசோடில் ஐஸ்வர்யா ஸ்டாண்ட், ட்ரைபேட், லைட் என வீடியோ எடுப்பதற்காக வாங்க வேண்டும் என கண்ணனிடம் கூற என்னிடம் பணம் இல்லை என கண்ணன் கூறுகிறார் ஆனால் ஐஸ்வர்யா உங்கள் அண்ணனிடம் வாங்கிக் கொள்ளலாம் என கேட்க அதற்கு கண்ணன் அண்ணனுக்கு வீடியோ எடுக்கிறது பிடிக்கல இதுல அவர்ட்டே காசு கேட்கிறதா என ஐஸ் யுடன் சொல்லிக்கொண்டிருக்கிறார்.

அதற்கு ஐஸ்வர்யா பெரிய அண்ணன் கிட்ட வேணாம் கதிர் அண்ணனிடம் கேட்கலாம் நமக்கு காசு வந்ததும் வட்டியும் பணமும் கொடுத்துடலாம் சேனல் பிரபலமானதும் நாம காச வச்சுட்டு என்ன பண்ணப் போறோம் அவங்களுக்கு தானே கொடுக்க போறோம் என ஆசை வார்த்தை கூறி கண்ணனின் மண்டையை கழுவுகிறார்.

அடுத்த காட்சியில் ஜனார்த்தனன் வீட்டில் மீனாவின் குழந்தை பள்ளிக்கு போக மாட்டேன் என அடம் பிடித்து கொண்டிருக்க அடிச்சேன்னா பாரு ஒழுங்கா ஸ்கூலுக்கு போ என விரட்டுகிறார். ஆனால் மீனாவின் அம்மா ஒரு நாள் தானே இருக்கட்டும் எனக் கூற உடனே ஜீவா அதெல்லாம் வேண்டாம் நான் ஏதாவது சொல்லி சமாளிச்சு ஸ்கூல்ல கொண்டு விட்டு விடுகிறேன் என ஜீவா கூறுகிறார்.

அந்த சமயத்தில் ஜனார்த்தனன் வந்து ஸ்கூலுக்கு போக விருப்பம் இல்லையா என கேட்டுவிட்டு மீனாவின் அம்மாவை தூக்கிக் கொண்டு போக சொல்கிறார். விடுங்க மாப்பிள்ளை இப்ப என்ன கலெக்டர்க படிக்குது பிளே ஸ்கூல் தானே போகலன்னா பரவால்ல நாளைக்கு போய்க்கிட்டும் என கூறி விடுகிறார். இந்த நேரத்தில் ஜனார்த்தனன் திருச்சி விஷயத்துல நீங்க சொன்னது சரிதான் மாப்பிள்ளை மேனேஜரும் ஓகே தான் சொல்றாரு ஆனா அங்க போய் அலையனும் அதெல்லாம் ரொம்ப கஷ்டம்.

அதனால அப்படியே வித்துருவோம் எனக் கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் குடவுன்லயும் கடையிலையும் பசங்க கிட்ட ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்கீங்களா உங்களுக்கு ஏன் மாப்பிள்ளை அதெல்லாம், விட்டுட்டு நீங்க போயிட்டு ரிலாக்ஸா இருங்க கையெழுத்து போடுறது வந்தா போடுங்க இல்லன்னா அவங்கள தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்க போதும் என கூறுகிறார் இதனால் மீனா டென்ஷன் ஆகிறாள்.

அதேபோல் ஜீவாவும் எழுந்து செல்கிறார். அடுத்த காட்சியில் மீனா தனம் வீட்டிற்கு வர குழந்தையை தனம் கொஞ்சி கொண்டிருக்கிறார் அந்த நேரத்தில் மூர்த்தி உள்ளே வருகிறார் மீனவைப் பார்த்து பேசிக் கொண்டிருக்கிறார். பிறகு மூர்த்தி நான் கிளம்புகிறேன் சாய்த்திரம் இருந்து சாப்பிட்டு தான் போகணும் என கூறிவிடுகிறார் அதனால் மீணாவும் இங்கே இருக்கிறார்..

அதன் பிறகு மூர்த்தி போனவுடன் மீனா தனதிடம் ஜீவா அங்க சந்தோஷமாக இல்லை அவனுடைய மனசு உசுரு எல்லாமே இங்கதான் இருக்கு என கூறுகிறார் தனத்திடம் அதனால் தனம் கவலைப்படுகிறார் அதுமட்டுமில்லாமல் சீக்கிரம் ஜீவா இங்கே வந்துருவான் எனவும் கூறுகிறார். அடுத்த காட்சியில் கண்ணன் ஆபீஸ் கிளம்பி கொண்டிருக்கிறார். ஆனால் ஐஸ்வர்யா இன்னைக்கு லீவு போடு என கூற இனி லீவு போட்டனா மொத்தமா இங்கேயே தான் இருக்கணும் என கூறி விடுகிறார்.

ஆபீஸ் கிளம்பும் நேரத்தில் கிரெடிட் கார்ட் பில் காட்டாததால் வீட்டிற்கு வந்து விடுகிறார்கள். எப்பதான் பில்ல கட்டுவீங்க என கேட்கிறார்கள் ஆனால் கண்ணன் சீக்கிரம் கட்டி விடுகிறேன் என கூறுகிறார். இத்தனை கடனுக்கும் ஐஸ்வர்யா தான் காரணம் அவர் வீடியோ எடுபதர்க்கு வாங்க சொன்னதால்தான் இவ்வளவு கடனும் ஆனால் கடன்காரர்கள் வந்து போனதுக்கு பிறகும் ஐஸ்வர்யா அண்ணனிடம் காசு கேட்க சொன்னேனே ஸ்டாண்ட் லைட் வாங்க கேட்டீங்களா என கேட்க கண்ணன் அதிர்ச்சி அடைகிறார்.

சேனல் பெரிய நிலைமைக்கு வந்தது நம்ம எல்லா கடனையும் அடைச்சிடலாம் என ஐஸ்வர்யா நம்பிக்கை கூறுகிறார் கண்ணனிடம் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

Leave a Comment