பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோடில் டாக்டர் தனத்திடம் சீக்கிரமாக ஆபரேஷன் பண்ணி கட்டிய ரிமூவ் பண்ணி ஆகணும்னு சொல்றாங்க இல்லனா உயிருக்கே ஆபத்தாகிடும் சொல்றாங்க குழந்தை இருக்கும்போது ஆபரேஷன் பண்ண முடியுமா எனகேட்கிறார் தனம் அதெல்லாம் முடியாது குழந்தையை ஆபரேஷன் பண்ணி எடுத்துட்டு தான் இந்த ஆப்ரேஷன் பண்ணனும் என கூறுகிறார் டாக்டர்.
உடனே தனம் அப்புறம் எப்படி என் குழந்தைக்கு நான் பால் கொடுக்க முடியும் என தனம் சோகமாகிறார் உடனே மீனா அக்கா அதான் முள்ளை இருக்கா இன்னும் கொஞ்ச நாள்ல ஐஸ்வர்யாவுக்கும் குழந்தை பொறந்துரும் அப்புறம் என்ன அதெல்லாம் பாத்துக்கலாம் என கூறுகிறார் ஆனால் தனம் தனது குழந்தைக்கு என்னால பால் கொடுக்க முடியாது என வருத்தப்படுகிறார்.
ஹாஸ்பிடலில் இருந்து நேரா வீட்டுக்கு போகாமல் கோவிலுக்கு செல்கிறார்கள் உடனே மீனா அழுகிறார், உடனே தனம் நான் என்ன எல்லாம் நினைச்சு வச்சிருந்தா நம்ம எல்லாரும் ஒரே குடும்பமாக கூட்டு குடும்பமா சந்தோஷமா ஜாலியா இருக்கலாம் என்று நினைத்தேன் கயல், பாண்டிய முல்லையோட பொண்ணு, ஐஸ்வர்யாவை விட குழந்தை என எல்லாம் ஒரே வீட்டில் ஒத்துமையா இருக்கணும்னு நினைச்சேன் என வருத்தப்பட்டு மாறி மாறி அழுது கொள்கிறார்கள்.
உடனே மீனா இனிமே நம்ம வருத்தப்பட்டு ஒன்னும் ஆக போறது இல்ல வீட்ல சொல்லி உடனே ஆப்ரேஷனுக்கு ரெடி பண்ண வேண்டும் என கூற தனம் மீனா விடம் சத்தியம் வாங்குகிறார் யாரிடமும் சொல்லக்கூடாது நானே சொல்லிக்கிறேன் ஒரு வாரம் மட்டும் டைம் கொடுங்க என சத்தியம் வாங்கிக் கொள்கிறார் நீங்க என்ன கண்டிஷன்ல இருக்கீங்கன்னு தெரியுமா என கூறியும் தனம் கேட்காமல் சத்தியம் கேட்கிறார்.
தனம் மற்றும் மீனா இருவரும் வீட்டிற்கு வருகிறார்கள் அவர்களிடம் என்ன ஆச்சு ஏன் சோகமா இருக்கீங்க என ஐஸ்வர்யா கேட்கிறார் அதெல்லாம் ஒன்னும் இல்ல என கூறி சமாளிக்க மீனா சீக்கிரம் சொல்லிடுங்க அக்கா என்ன கூறிவிட்டு வீட்டிற்கு கிளம்பும் நேரத்தில் முல்லை உங்களுக்குள்ள ஏதோ இருக்கு அதனால தான் எப்படி இருக்கீங்க என துருவித் துருவி கேள்வி கேட்கிறார்.
உடனே மீனா அக்கா ரொம்ப லேட்டா இரண்டாவது குழந்தை பெத்துகிறாங்க அதனால அவங்களுக்குள்ள கொஞ்சம் ப்ராப்ளம் இருக்கு அதனால தான் சில டெஸ்ட் எடுக்க வேண்டியது இருந்துச்சு அது மட்டும் இல்லாம குழந்தையை கேர்ஃபுல்லா பார்த்துக்க சொல்லி இருக்காங்க என கூறி உண்மையை மறைத்து விடுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.