கதிர் மாமியாரால் வீட்டை விட்டு கிளம்பும் மூர்த்தி, தனம்.! சத்தியம் வாங்கிய முல்லை.! பரபரப்பான திருப்பங்களுடன் பாண்டியன் ஸ்டோர்.

0
pandian-store
pandian-store

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. இந்த சீரியலில் ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் சமீபத்திய எபிசோடில் ஜீவா தன்னுடைய மாமனார் செய்வது எதுவும் பிடிக்காமல் மீனாவிடம் புலம்பி கொண்டிருக்கிறார்.

மீனா ஜீவாவுக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருக்கிறார் ஆனாலும் ஜீவா ஒரு நடை பிணம் போல் இருப்பது போல் உணருகிறார். அதே போல் தனத்திடம் முல்லை கண்ணன் கதிரிடம் பணம் வாங்கியதை கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் மருத்துவமனைக்கு பணம் கட்டியதையும் இப்பொழுது வீடியோ எடுப்பதற்காக கொஞ்சம் பணம் வாங்கியதையும் கூறிவிடுகிறார், அதனால் தானம் அதிர்ச்சி அடைகிறார்.

உடனே தனம் கண்ணனிடம் சென்று எதற்காக கதிரிடம் பணம் வாங்குகிற நீ சம்பளம் வாங்குற அத வச்சு உன்னால குடும்பத்தை நடத்த முடியலையா என கண்ணனை பார்த்து தனம் கேள்வி கேட்கிறார். அடுத்த காட்சியில் முல்லை இடம் தனம் பணத்தை கொடுக்க உடனே மூர்த்தி பார்த்து விடுகிறார். அதனால் கண்ணன் கதிரிடம் பணம் வாங்கியதை முல்லை கூறிவிடுகிறார், இந்த நிலையில் கண்ணனை பார்த்த மூர்த்தி நாக்கை பிடுங்குவது போல் கேள்வி கேட்கிறார். இத்துடன் எபிசோடு முடிந்த நிலையில் தற்பொழுது ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

இதில் தனம் அழுது கொண்டே வீட்டு வாசலில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அப்பொழுது மூர்த்தி ஏன் அழுகிறாய் என கேட்க உடனே தனம் நம்ம இங்க இருந்து போயிடலாமா மாமா என கேட்டுக் கொண்டிருக்கிறார் யாராவது ஏதாவது சொன்னார்களா என மூர்த்தி கேட்க கதிரின் மாமியார் ரெண்டு பேரும் மாசமா இருக்கீங்க ரெண்டு பேரும் ஒரே இடத்தில் இருக்க கூடாது. என் பிள்ளைக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா என்னால தாங்க முடியாது என தனத்தை பார்த்து  பேசாம உங்க வீட்டுக்கே போயிடு என கதிரின் மாமியார் தனத்தை பார்த்து கூறுகிறார்.

உடனே தனம் பேக்கை எடுத்துக்கொண்டு மூர்த்தியும் கிளம்புகிறார் . அந்த சமயத்தில் கதிர் வந்து எங்க கிளம்புறீங்க என கேட்க கொஞ்ச நாளைக்கு எங்க வீட்டிலேயே இருக்கலாம் என்று முடிவு செய்துள்ளோம் என தனம் கூறுகிறார். அண்ணன் எப்படி வரேன்னு ஒத்துகிச்சு. உடனே முல்லை எங்க அம்மா ஏதாவது சொல்லுச்சா என்ன கேட்கிறார். யாரும் எதுவும் சொல்லல என தனம் கூற உடனே முல்லை என் மேல சத்தியமா நீங்க போகக்கூடாது என சத்தியம் வாங்குகிறார் முல்லை.

உடனே முல்லையின் அம்மா ரூமுக்குள் வரும்பொழுது நீ உடனே கிளம்பு என முல்லை அவருடைய அம்மாவை பார்த்து கூற இப்போ உனக்கு சந்தோஷம் தானே என தனத்தை பார்த்து முல்லை அம்மா  கேட்கிறார் உடனே கதிர் கோவப்பட்டு எங்க அண்ணிய பத்தி எதுவும் சொல்லக்கூடாது நீ வெளில போ அமைதியா கிளம்பி விடு என கூறுகிறாய் இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது.