அழுது கொண்டிருக்கும் ஐஸ்சிடம் பணத்தைக் கேட்டு டார்ச்சர் செய்யும் சித்தி.! வளைகாப்பை நிறுத்திய கண்ணன்.! பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோட்.

0
pandian-store-today-episode
pandian-store-today-episode

பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோட்டில் கண்ணனை பேங்க் ஆபிஸர்கள் அடித்து துவைக்கிறார்கள் பிறகு இந்த விஷயம் கதிருக்கு தெரிந்து பேங்க் ஆபீஸர்களை அடித்து விடுகிறார். இதனால் கதிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று விடுகிறார். வீட்டிலேயே கதிரை போலீஸ் அரெஸ்ட் செய்ததால் மூர்த்திக்கு விஷயம் தெரிந்து விடுகிறது இதனால் மூர்த்தி கண்ணன் வீட்டிற்கு சென்று கண்ணனை அடித்து எல்லாருடைய நிம்மதியையும் ஏன் கெடுக்கிற என கேள்வி கேட்டுவிட்டு வருகிறார்.

அடுத்த காட்சியில் மீனா கண்ணன் வீட்டிற்கு வர மீனாவுக்கு விஷயம் தெரிகிறது. இதனால் ஜீவாவிற்கு போன் செய்து கதிரை போலீஸ் பிடித்துவிட்டு போய்விட்டார்கள் அதனால் எப்படியாவது வெளியே எடுக்க வேண்டும் என விஷயத்தை ஜீவாவிடம் கூறுகிறார் ஜீவாவும் உடனடியாக போலீஸ் ஸ்டேஷனுக்கு கிளம்புகிறார். எல்லாத்துக்கும் காரணம் நான் தான் என கண்ணன் தலையில் அடித்துக் கொண்டு அழுகிறார்.

அந்த சமயத்தில் போன் வருகிறது மண்டபத்தில் அனைவரும் வந்து விட்டார்கள் நீங்கள் தான் இன்னும் வரவில்லை என மண்டபகாரர்கள் கூற உடனே கண்ணன் போனை எடுத்து வளைகாப்பு நின்று விட்டது என அனைவரிடமும் கூறிவிடுங்கள் என கூறுகிறார் இதனால் ஐஸ்வர்யா கதறி கதறி அழுகிறார் அது மட்டும் இல்லாமல் உடனடியாக சித்தி ஐஸ்வர்யாவை உள்ளே அழைத்து வளைகாப்பை நடத்தலாம் அது வீடியோ எடுத்து யூட்யூபில் போடலாம் அப்படி வரும் காசை வைத்து கடனை அடைக்கலாம் என கூறினாயே.

இப்ப என்னடா என்றால் வளைகாப்பு நிறுத்த சொல்றியே பணத்தை எப்படி கொடுப்பாய் என சித்தி ரூமில் வைத்து ஐஸ்வர்யாவிடம் கேட்கிறார். எப்படியாவது என் தலைய அடமானம் வைத்து உங்க கடனை கொடுத்து விடுகிறேன் என கூறுகிறார் ஆனாலும் சித்தி விடாமல் எப்படி கொடுப்ப எனத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் பேங்க் காரங்க வந்து மிரட்ட தான் செஞ்சாங்க ஆனா இவங்க உண்மையாலுமே உன்னை தூக்கிட்டு போயிடுவாங்க என கூறுகிறார் என் சித்தி நீ இந்த நேரத்துல பயன்படுத்துற நான் எப்படியாவது கடனை திருப்பி கொடுத்துவிடுகிறேன் என ஐஸ்வர்யா கதறி கொண்டு அழுகிறார்.

மீனா நடந்த அனைத்தையும் ஜீவாவிடம் கூற உடனே கண்ணன் போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்கிறார் கதிரை பார்த்து அழுகிறார் என்னால தான் இவ்வளவு பிரச்சனையும் என கதறுகிறார் வெளியே மூர்த்தி வக்கீல் இடம் பேசிக் கொண்டிருக்கிறார். அதனால் கண்ணன் ஓரமாக நிற்கிறார் ஜீவா வந்து கதிரை பார்க்கிறார் பணம் தான் பிரச்சனைன்னா எப்படியாவது செட்டில் பண்ணி இருக்கலாம் இல்ல ஏன் அவுங்க மேல கைய வச்ச என கதிரிடம் கேட்க அவங்க கண்ணனை அடிச்சாங்க அதனாலதான் அடித்தேன் என கூறுகிறார்.

அடுத்த காட்சியில் முல்லை அழுது கொண்டே இருக்கிறார் அவரை தனம் சமாதானப்படுத்தி பேசிக் கொண்டிருக்கிறார் ஆனாலும் முல்லையின் அம்மா குத்தி குத்தி காட்டிக் கொண்டிருக்கிறார் பிறகு மீனா வந்தவுடன் முல்லை மற்றும் தனத்திடம் நடந்த தகவலை கூறுகிறார் இதனால் அதிர்ச்சி அடைகிறார்கள் கண்ணனுக்கு ஏதாவது ஆயிடுச்சா என கேட்க மீனாவின் அம்மா அவனுக்கு ஒன்னும் ஆகாது அவன் நல்லா தான் இருப்பான் என குத்தி காட்டுகிறார். அதுமட்டுமில்லாமல் கண்ணன் வளைகாப்பை நிறுத்தியதையும் கூறுகிறார். பிறகு எப்படியாவது கதிரை வெளியே எடுத்து விடலாம் ஜீவாவையும் போ சொல்லி இருக்கேன் என கூறிவிடுகிறார் மீனா.

பிறகு ஜீவா மூர்த்தியிடம் வந்து என்ன பண்ணலாம் என கேட்கிறார் கண்ணனை பார்த்த மூர்த்தி இவனால் தான் எல்லா பிரச்சனையும் இவன் தான் வெளில போய் நிம்மதியா வாழலாம் நினைச்சாங்கல்ல இவன் இப்ப குடும்பத்தையே ஸ்டேஷனுக்கு வர வச்சுட்டான் என திட்டுகிறார் கண்ணனை பார்த்து பிறகு, கண்ணன் மேட்டர் அப்புறம் பாத்துக்கலாம் இப்ப கதிர வெளியில் எடுக்கலாம் என அனைவரும் கூற பிறகு மூர்த்தி அமைதியாகிறார்.

உடனே பேங்க் காரர்களிடம் சமாதானமாக பேசினால் மட்டுமே கதிரே வெளியே எடுக்க முடியும் என கூற சரி அத முதல்ல பார்ப்போம் என கூறிவிடுகிறார்கள் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.