பற்ற வைத்த முல்லையின் அம்மா கொழுந்துவிட்டு எரியப் போகும் பாண்டியன் ஸ்டோர் குடும்பம்.! தனம் எடுத்த அதிரடி முடிவு..

0
pandian-store-may15
pandian-store-may15

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்றைய எபிசோடில் மார்க்கெட்டுக்கு போயிட்டு வந்த கண்ணனை தடுத்து நிறுத்தி மூர்த்தி பேசுகிறார். அது மட்டும் இல்லாமல் அவனே கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறான் அதை வாங்கிட்டு செலவு பண்றிங்களே உங்களுக்கெல்லாம் கஷ்டமா இல்லையா அவன் 15 வயசுல இருந்து கஷ்டப்படுகிறான் உன்னை படிக்க வச்சதும் அவன் தான் இன்னைக்கு நீ வேலையில இருக்குறதுக்கு காரணமும் அவன்தான் ஆனா அவனிடமே திரும்பவும் பணத்தை வாங்கி செலவு பண்றியே இன்னொரு டைம் பணத்தை வாங்கி செலவு பண்ண பிச்சிருவேன் என மூர்த்தி கண்ணனை பார்த்து கூறுகிறார்.

அடுத்த காட்சியில் தனம் மற்றும் முல்லை இருவரும் தூங்குவதற்கு ரெடி ஆகிறார்கள் அப்பொழுது தனம் பெட்ஷீட்டை எடுத்துக்கொண்டு நான் வெளியே படுத்துக்கொள்கிறேன் சித்தி உள்ளே படுத்துக்கொள்ளட்டும் எனக் கூற, வேண்டாம் அக்கா நீங்களே இங்க படுத்துக்கோங்க அம்மா வேணா வெளியில படுத்துக்கிட்டும் என கூறுகிறார்.

முல்லையின் அம்மா உள்ளே வந்த பிறகு நீ இங்கே படுத்துக்கோ சித்தி என தனம் கூற நான் எப்படி இங்க படுத்துக்கிறது அவங்க ரெண்டு பேரும் இங்க படுத்துருப்பாங்க இல்ல என கூறுகிறார் தனம். அதற்கு முல்லை நானும் அக்காவும் தான் இங்க படுத்துப்போம் கதிரும் மாமாவும் வெளியில தான் படுத்துப்பாங்க என தன்னுடைய அம்மாவிடம் கூறிக் கொண்டிருக்கிறார் முல்லை .

அடுத்த காட்சியில் கயல் பாப்பாவை பெயரை சொல்லும் படி அனைவரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் கயல் பாப்பா சொல்லாமல் இருந்து வருகிறது. உடனே பெயரை மாற்றி விடலாம் என ஜனார்த்தனன் கூறுகிறார் அதற்கு அதெல்லாம் வேண்டாம் என ஜீவா கூற சும்மா பேருதான மாப்பிள மாற்றி விடலாம் என பேசிக் கொண்டிருக்கிறார்கள் பிறகு அனைவரும் சாப்பிட கிளம்பியதும் ஜீவா மீனாவிடம் பேரெல்லாம் மாற்றக்கூடாது இது எங்க வீட்ல எல்லாரும் சேர்ந்து எடுத்த முடிவு அதுபோல முதல் வாரிசு என்பதால் எல்லாரும் சேர்ந்து தானே வைத்தோம் என ஜீவா கூறுகிறார் மீனாவும் நான் சும்மாதான் சொன்னேன் விளையாண்டேன் என சொல்லி சமாளிக்கிறார்.

இங்கே இருக்கிறதுக்கு பேசாம அங்கேயே இருந்திருக்கலாம் என ஜீவா கூற இதை தான் நானும் நினைச்சேன் என மீனாவும் கூறுகிறார். அடுத்த காட்சியில் தனத்திடம் மீனாவின் அம்மா வந்து ரெண்டு கர்ப்பமான பெண்கள் ஒரே இடத்தில் இருக்கக் கூடாது ஏதாவது ஒரு குழந்தைக்கு ஏதாவது ஆகிடும் என பெருங்குண்டை தூக்கி போடுகிறார் தனமும் அதற்கு ஹாஸ்பிட்டலில்  அத்தனை பேர் ஒன்னாக தான் இருக்காங்க ஆனா எல்லா குழந்தையும் நல்லா தானே இருக்கு என கேட்க நீ பேசாம உங்க வீட்டுக்கு போய்விடு தனம் என கூறுகிறார் முல்லையின் அம்மா.

இது அவங்க வீடு தானே நீங்க ஏன் இங்க வந்து ஒட்டிக்கிட்டு இருக்கீங்க நீ அங்க போயிடு உங்க அம்மா வீட்டுக்கு குழந்தை பிறந்த பிறகு நீ இங்க வந்துரு உனக்கு கல்யாணம் ஆகி பல வருடம் ஆகுது ஆனா என் பொண்ணு முல்லைக்கு கல்யாணம் ஆகி மூணு நாலு வருடம் தான் ஆகுது அவங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கட்டும் இதெல்லாம் நான் சொல்லித்தான் உனக்கு தெரியணுமா உனக்கா தெரியாதா என வாய்க்கு வந்தபடி பேசுகிறார்.

பின்பு அனைவரும் நாற்காலியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது தனம் மட்டும் கீழே உட்காருகிறார் அது மட்டும் இல்லாமல் கதிரும் முல்லையும்  நீங்க போய் தூங்குங்க மாமா வந்ததும் நான் கதவை திறந்து விடுகிறேன் என கூறுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.