நீ போட்ட வீடியோலயே இது ஒன்னு தான் உருப்படியான வீடியோ சந்தோஷத்தில் முல்லை, மீனா. பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோட்..

pandiyan-stores september 05
pandiyan-stores september 05

Pandiyan store : இன்றைய எபிசோடில் தனத்திற்கு பிரஸ்ட் கேன்சர் இருப்பதை நினைத்து மூர்த்தி அழுது கொண்டிருக்கிறார் அதற்கு தனம் இந்த நோய் வந்துச்சு இனிமே என்ன பண்ண முடியும் அதை சரி பண்ணிடலாம் எனக்கு ஒன்னும் ஆகாது நீங்க அழாதீங்க என்று ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார். பிறகு நீங்க இப்படியே அழுதுகிட்டே இருந்தா நான் பெட்டி எடுத்துட்டேன் எங்கயாவது போயிடுவேன்..

நீங்க எல்லாம் தான் எனக்கு ஆறுதல் சொல்லணும் ஆனா நீங்களே இப்படி அழுதுட்டு இருந்தா நான் என்ன பண்ணுவேன் என்று தனமும் அழுகிறார் பிறகு மூர்த்தி சமாதானமாகிவிட்டார். அடுத்து ஜனாதிரனும் கலையும் தனம் கிட்ட உடம்ப பாத்துக்கோ என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்புகின்றனர்.

அதேபோல் தனத்தின் அண்ணனும் கிளம்பும்போது அழுகிறார் உடனே தனம் என்னோட பெரிய நம்பிக்கையை நீ தான் அண்ணன் என்று சொல்ல உனக்கு எதுவா இருந்தாலும் என்னை கூப்பிடு நான் உடனே வரேன் என்று சொல்லிவிட்டு ஜெகாவும் கிளம்புகிறார் கஸ்தூரியும் தனத்திடம் சொல்லிவிட்டு கிளம்புகிறார். அடுத்து முல்லையின் அப்பாவும் நல்லவங்கள கடவுள் எப்பயும் கைவிடமாட்டார்..

உனக்கு சரியாயிடும் என்று சொல்லிவிட்டு அவரும் வீட்டுக்கு போகிறார். பிறகு கண்ணன் எப்படி அண்ணி இவ்ளோ நாள் எங்களுக்கு தெரியாம இவ்வளவு மாத்திரை எல்லாம் சாப்பிட்டு இருக்கீங்க என்று கேட்க ஐஸ்வர்யா அது மட்டும் இல்ல, இவ்வளவு நாள் அக்காவோட குழந்தைக்கு முல்லை அக்கா தான் பால் கொடுத்தாங்க என்றும் சொல்கிறார்.

இதற்கு முல்லை இது என்ன ஒரு பெரிய விஷயமா அக்கா குழந்தை என் குழந்தை மாதிரி இல்லையா, நான் பண்ணதெல்லாம் ஒரு விஷயமே இல்ல மீனாதான் அக்கா கூட ஆரம்பத்தில் இருந்து பாத்துக்கிட்டாங்க என்று சொல்ல.. பிறகு தனமும் நான் ரொம்ப கொடுத்து வச்சவ முல்லையும் மீனாவும் தான் என்ன நல்லா பாத்துக்கிட்டாங்க என்று சொல்கிறார். அடுத்து மீனா, முல்லை இருவரும் ஐஸ்வர்யா கிட்ட எப்படியோ இந்த உண்மை எல்லாருக்கும் தெரிஞ்சுச்சு என்று சொல்ல..

என்னால தான் எல்லாருக்கும் தெரிஞ்சது என ஐஸ்வர்யாவும் சொல்கிறார் அதற்கு முல்லை இந்த ஒரு விஷயம் நல்லதா நடந்துச்சு என்கிறதுக்காக மறுபடியும் இப்படி ஒரு வேலை பார்த்திராத என்று சொல்கிறார். பிறகு நடந்தது நடந்துச்சு இனிமே இதை எப்படி சரி பண்றதுன்னு மட்டும் பார்க்கலாம் என எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். இதோட இந்த எபிசோட் முடிந்துள்ளது