பாண்டியன் ஸ்டோர் குமரன் “நடிகர் வெங்கடேஷ்” குறித்து வெளியிட்ட உருக்கமான பதிவு.! கண்கலங்க வைக்கும் நியூஸ்.

சின்னத்திரை தொலைகாட்சியில் விஜய் டிவி சமீபகாலமாக நல்ல முன்னேற்றத்தைக் கண்டு வர பல நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் உறுதுணையாக இருக்கின்றன அந்த வகையில் பாரதிகண்ணம்மா சீரியல்  நல்ல முன்னேற்றத்தை இதுவரையிலும் கொடுத்து வருகிறது.

இந்த சீரியலின் கதை களம் ஒரு கணவன், மனைவி எப்படி இருக்க வேண்டும் ஒரு மாமியார் , மருமகள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் அப்பா, மகள் பாசத்தை வெளிப்படுத்துவது போன்று அமைக்கப்பட்டிருந்தது.

இதில் நடித்தவர்கள் அனைவரும் தனது சிறந்த பங்களிப்பை கொடுத்து வருகின்றனர் அவர்களில் ஒருவராக பாரதிகண்ணம்மா அப்பாவாக தோன்றி மக்கள் மத்தியில் நல்ல நல்ல பெயரை சம்பாதித்து நடிகர் வெங்கடேஷ்.

இவர் திடீரென நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். இச்செய்தி சின்னத்திரை பிரபலங்களையும் தாண்டி வெள்ளித்திரை பிரபலங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மறைவு குறித்து பல பிரபலங்களும் தனது அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர் அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் நட்சத்திரம் குமாரன் வெங்கடேஷ் அவர்கள் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறியது  நான் பணியாற்றிய சிறந்த நடிகர்களில் இவரும் ஒருவர். இவரின் மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. RIP அப்பா என பதிவிட்டுள்ளார். இச்செய்தியை பலரையும் தற்பொழுது கண்கலங்க வைத்துள்ளது.