விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. அது மட்டும் இல்லாமல் ஒரு காலகட்டத்தில் பாண்டியன் ஸ்டார் சீரியல் டிஆர்பி யில் அதிக ரேட்டிங் பிடித்து வந்தது விஜய் தொலைக்காட்சி.
இந்த நிலையில் சமீப காலமாக வேறு மொழிகளில் இருந்து படங்களை ரீமேக் செய்வது போல் சீரியல் களையும் வேறு மொழியிலிருந்து ரீமேக் செய்து ஒளிபரப்பப்படுகிறது அந்த வகையில் வேறு மொழியில் இருந்து ரீமேக் செய்யப்பட்ட பல சீரியல்கள் தமிழில் வெற்றி பெற்றுள்ளன ஆனால் பாண்டியன் ஸ்டோர் சீரியல் அப்படி கிடையாது.
தமிழிலேயே உருவாக்கப்பட்ட கதை இதனை பல மொழிகளில் ரீமிக்ஸ் செய்துள்ளார்கள் அப்படி இருக்கும் நிலையில் இந்த தொடர் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் கிடைத்தது. அதேபோல்தான் கதையும் தற்பொழுது நகர்ந்து வந்துள்ளது ஒவ்வொரு குடும்பமாக ஒன்று சேர்ந்து வருகிறார்கள் அது மட்டும் இல்லாமல் பாண்டியன் ஸ்டோர் குடும்பம் கிட்டத்தட்ட ஒன்று சேர்வது போல் கூடி வருகிறது.
இந்த பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மக்களால் திட்டி தீர்க்கும் ஜோடி என்றால் அது கண்ணன் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரம் தான் இவர்களை மக்கள் திட்டி தீர்ப்பார்கள் ஏனென்றால் மற்றவர்கள் வலியை புரிந்து கொள்ளாமல் மற்றவர்களிடமிருந்து பணத்தை வாங்கி youtube வீடியோ பண்ணுகிறேன் என பல பொருட்களை வீட்டில் வாங்கி அதனை வீடியோ எடுத்துப் போட்டார்கள்.
அதுமட்டுமில்லாமல் ஹோட்டல் நடத்தி கஷ்டப்படும் கதிரிடமும் பணம் வாங்கி கேமரா ஸ்டாண்ட் வாங்கியதை பார்த்து பல ரசிகர்கள் மற்றும் மக்கள் திட்டி தீர்த்தார்கள். இந்த நிலையில் கண்ணன் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் சரவணன் மற்றும் தீபிகா ஜோடியாக நடித்து வருகிறார்கள் இவர்கள் உண்மையில் காதலிக்கிறார்கள் என ரசிகர்கள் பேசினாலும் இதுவரை உறுதிப்படுத்தாமல் இருந்து வந்தார்கள்.
அப்படி இருக்கும் நிலையில் தீபிகா சரவண விக்ரமுடன் இருக்கும் புகைப்படத்தை ஸ்டோரில் பகிர்ந்து நாம் ஒன்றாக இருக்க வேண்டும் அதுதான் டீல் மை டியர் என பதிவு செய்துள்ளார் இந்த ஸ்டோரி ரசிகர்களிடையே வைரல் ஆகி வருகிறது.