விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கடந்த சில நாட்களாகவே சுவாரஸ்யம் குறைந்தது போல் காணப்படுகிறது இந்த நிலையில் ஹோட்டலில் பிரச்சனை செய்ய வந்த வில்லனை கதிர் அடித்து விடுகிறார், அதனை மனதில் வைத்துக் கொண்டு இருவரும் ஹாஸ்பிடல் போகும்போது முல்லை கீழே தள்ளி விடுகிறார் வில்லன். அதன் விளைவாக முல்லைக்கு வயிற்றில் அடிபட்டு விடுகிறது உடனே ஹாஸ்பிடலுக்கு கூட்டி செல்கிறார் கதிர்.
ஹாஸ்பிடலுக்கு சென்ற கதிருக்கு காத்திருந்தது அதிர்ச்சி ஏனென்றால் ஏழு மாதத்திலேயே முல்லைக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் குழந்தையை எடுத்தாக வேண்டும் என டாக்டர் கூறிவிடுகிறார்கள் வேறு என்ன செய்வது என்று தெரியாமல் ஆபரேஷனுக்கு ரெடி செய்கிறார்கள் ஆபரேஷன் செய்து குழந்தையும் முல்லையும் நலமாக இருப்பதாக டாக்டர் கூறிவிடுகிறார்கள், இதனால் குடும்பமே மிகவும் சந்தோஷத்தில் இருந்தது அது மட்டும் இல்லாமல் ஒவ்வொருவரும் சாமிக்கு நேர்த்திக்கடன் செய்து கொண்ட நிறைவேற்றி வந்தார்கள்.
மூர்த்தி தேங்காய் உடைத்தார் ஜீவா அன்னதானம் செய்தார் என இப்படி குடும்பமே சந்தோஷத்தில் மிதந்தது. அப்படி இருக்கும் நிலையில் திடீரென பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் பெரிய பூகம்பமே ஏற்பட்டுள்ளது அதனால் அனைவரும் கண்ணீரில் மிதக்க போகிறார்கள். ஏனென்றால் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து புதிய பிரமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் தனம் டாக்டரிடம் வந்துள்ளார்.
இந்த பக்கம் வலிக்குது எனக் கூற உடனே வாங்க செக் பண்ணிடலாம் என ஸ்கேன் எடுத்து பார்க்கப் போகிறார்கள் ஸ்கேன் எடுத்ததில் அவருக்கு மிகப்பெரிய கட்டி இருப்பதாக தெரிய வருகிறது. உடனே அதனை தனத்திடம் டாக்டர் கூற மேமோகிராம் டெஸ்ட் ஒன்று எடுக்க வேண்டும் தனத்திடம் கூறிவிடுகிறார் இதனால் தனம் அழுது கொண்டு ஹாஸ்பிடலில் இருந்து வெளியே செல்கிறார் அந்த சமயத்தில் மீனா தனத்தை பார்க்கிறார், நீங்க ஏன் அக்கா ஹாஸ்பிட்டளுக்கு என கேட்க உடனே ஆட்டோ வெயிட் பண்ணுகிறது நான் கிளம்புகிறேன் என கிளம்பி விடுகிறார்.
ஆனால் மீனா டாக்டரிடம் வந்து அவங்களுக்கு என்ன ஆச்சு என கேட்கிறார் தனத்திற்கு பிரேஸ்டில் மிகப்பெரிய கட்டி இருப்பதாக கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் மெமோகிராம் எடுக்க வேண்டும் என கூறியுள்ளன் எனவும் கூறுகிறார் இதனால் மீனா அதிர்ச்சி அடைகிறார். மீனா இதனை பாண்டியன் ஸ்டோர் குடும்பத்திடம் கூறினால் பாண்டியன் ஸ்டோர் குடும்பமே கண்ணீரில் மிதக்கும் என தெரிகிறது இனி வரும் எபிசோடில் என்ன நடக்கும் என்பதை காணலாம். இத்துடன் ப்ரோமோ வீடியோ முடிகிறது.