எவ்வளவு பட்டாலும் திருந்தாத ஐஸ்வர்யா மற்றும் கண்ணன்.! வளைகாப்பில் செய்த கேவலமான செயல்.! வெளுத்து விட்ட சித்தி பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோட்.

pandiyan-store
pandiyan-store

பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோடில் கண்ணன் மனைவி ஐஸ்வர்யாவுக்கு வளைகாப்பு மிகவும் தடபுடலாக வீட்டிலேயே ரெடி செய்கிறார்கள் அதற்கு அனைத்து வேலைகளையும் பரபரப்பாக  அனைவரும் செய்து கொண்டிருக்கிறார்கள். அதிலும் தனம் உடம்பு சரி இல்லை என தெரிந்தும் அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டு செய்து கொண்டு வருகிறார் இதை பார்த்த மீனா அக்கா பொறுமையா உங்களுக்கே உடம்பு சரியில்லை என கூறினாலும் கேட்காமல் அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறார்.

அடுத்த காட்சியில் ஐஸ்வர்யாவை மேக்கப் செய்து ரெடி செய்து கொண்டிருக்கும் பொழுது கண்ணன் அங்கேயே பார்த்து ஐஸ்வர்யா ரொம்ப அழகு தான் என வர்ணித்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் கண்ணனிடம் அங்கு நிறைய வேலை இருக்கு நீங்க இங்க என்ன செய்ற கிளம்பு என கண்ணனை மீனா மற்றும் முல்லை அனுப்பி விடுகிறார்கள்.

பிறகு மூர்த்தி உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது முல்லையின் அப்பா மற்றும் அம்மா இருவரும் வருகிறார்கள் முல்லையின் அப்பா எல்லா வேலையும் முடிந்து விட்டதா என கேட்க அதற்கு மூர்த்தி எல்லா வேலையும் தம்பிகளே பார்த்து விட்டார்கள் பத்தாதா குறைக்க தனம் மற்றும் மீனா ரெண்டு பேரும் பரபரப்பா எல்லா வேலையும் செஞ்சு கொண்டு இருக்கிறார்கள் எனக் கூறுகிறார்.

முல்லையின் அம்மா முல்லை இடம் குழந்தை என்ன பண்ணுகிறது என கேட்க தூங்கிக் கொண்டிருக்கிறது  தயவு செஞ்சு எழுப்புடாதம்மா என்னால முடியாது எனக் கூறுகிறார் சின்னமா இரண்டு நாட்களாக காணவில்லையே என பேச்சை தொடங்கும் பொழுது சித்தப்பாவை பார்க்காமல் இருக்க முடியல அதான் சின்னம்மா போயிட்டாங்க எனக்கு கூறுகிறார் அதெல்லாம் ஒன்னும் கிடையாது வீட்ல போட்டது போட்டதுபடியே அப்படியே கிடந்தது அதனால தான் போனேன் என கூறுகிறார். உடனே ஐஸ்வர்யா நான் அழகா இருக்கேனே நான் கேட்க நீ அழகா தான் இருக்கிறாய் என கூறுகிறார் முல்லையின் அம்மா.

அடுத்த காட்சியில் கண்ணன் தட்டில் பழங்களை எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார் அப்பொழுது ஜீவா மற்றும் கதிர் எப்படி நடிக்கிறான் என்று பாரு என பேசிக்கொண்டு இருக்கிறார்கள் உடனே கண்ணனிடம் என்னடா பண்ற இதெல்லாம் நாங்க பாத்துக்க மாட்டோமா எனக் கூற அதற்கு கண்ணன் வேலை செஞ்சாலும் திட்டுகிறீர்கள், வேலை செய்யலைனாலும் திட்டுறீங்க நான் என்னதான் பண்றது என கிண்டலாக பேசிக் கொண்டிருக்கிறார்.

இதற்கிடையில் ஐஸ்வர்யாவின் சித்தியை உனக்கு தான் பெண் குழந்தையே இல்லையே ஐஸ்வர்யாவை அழைத்துக் கொண்டு சென்று பிரசவம் பார்க்க வேண்டியதானே என கேட்க நீங்களே முல்லை அழைத்து கொண்டு போல நான் எப்படி அழைத்துக்கொண்டு போக முடியும் என கூறுகிறார் அதற்கு ஐஸ்வர்யா நீங்களே போக சொன்னாலும் நான் அங்க போக மாட்டேன் என சொல்ல உடனே தனம் இங்கேயே இருக்கட்டும் இங்கேயே நல்லபடியா பிரசவம் பார்த்துக் கொள்ளலாம் என கூறுகிறார்.

கொஞ்ச நேரத்தில் வளைகாப்பு பங்க்ஷன் ஆரம்பிக்கிறது அப்பொழுது கண்ணன் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் தனம் நீ வந்து இங்க உட்காரு சம்பிரதாயம் செய்ய வேண்டும் என கூப்பிட கண்ணன் உட்காருகிறார் கொஞ்ச நேரத்தில் ஐஸ்வர்யா கணையிடம் போனை வாங்கி வீடியோ எடுக்கப் போகிறார் வீடியோ எடுக்கும் பொழுது மூர்த்தி பார்த்துவிட்டு இந்த புள்ள என்ன இப்படி நடந்து கொள்கிறது என அதிர்ச்சி அடைகிறார் அது மட்டும் இல்லாமல் மூர்த்தியை  பார்த்த அனைவரும் ஐஸ்வர்யாவிடம் கொஞ்ச நேரம் அமைதியா இருக்கிறியா என கேட்கிறார்கள் .

ஆனாலும் அடங்காத ஐஸ்வர்யா வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் ஐஸ்வர்யாவின் சித்தி போனை பிடுங்கி கொண்டு எந்த நேரத்துல என்ன பண்ணனும்னு உனக்கு தெரியாதா. உனக்கெல்லாம் வளைகாப்பு பண்றது பெருசு இதுல வீடியோ வேறயா என திட்டிவிட்டு போனை புடுங்கி கொள்கிறார். பிறகு எல்லா ஃபங்ஷன்லயும் நீ தானே ஆடுவாய் கண்ணா உன் ஃபங்ஷனுக்கு யாரு ஆடப்போறா என கேட்க நானே ஆடுறேன் என சாவு குத்து குத்துகிறார் இதை பார்த்த மூர்த்தி இவன் என்ன இப்படி நடந்துக்கிறான் என வெளியே செல்கிறார்.

இதனால் கண்ணன் அமைதி ஆகிறார் ஆனாலும் அடங்காத ஐஸ்வர்யா மீண்டும் சித்தியிடம் ஃபோனை கேட்கிறார் ஆனால் அவர் சித்தி திட்டி விட்டு அமைதியா இருக்கிறியா என பேசிவிட்டு ஃபங்ஷனை நடத்துகிறார்கள் பிறகு சிறிது நேரத்தில் போட்டோ எடுக்கிறார்கள் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.