நடிகர் சிம்புவை பல வருடங்களாக காதலித்து வரும் பாண்டியன் ஸ்டோர் பிரபலத்தின் தங்கை – வைரலாகும் வீடியோ.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக தொடர்ந்து பல படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் வெற்றியும் சந்தித்துள்ளது தோல்வியையும் சந்தித்துள்ளது இருந்தாலும் சிம்புக்கு என்று ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளன.

கடைசியாக வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த மாநாடு திரைப்படம் உலக அளவில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலை வாரிக் குவித்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது சிம்பு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதையடுத்து கொரோனா குமாரு, பத்துல தல போன்ற இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் சமீபத்தில் ஒளிபரப்பாகி நிறைவுபெற்ற பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் சிம்பு தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் தொலைக்காட்சியில் டாப் சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்.

madhura
madhura

தொடரில் கடைக்குட்டி கண்ணனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வரும் சாய் காயத்ரியின் தங்கை மதுராவும் சின்னத்திரை நடிகை ஆவார். இவர் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் நடிகர் சிம்புவை காதலிப்பதாக தெரிவித்துள்ளார் அவர் கூறியது, பள்ளிப் பருவத்தில் ஒரு நாள் சன் மியூசிக் தொலைக்காட்சியில் சிம்புவின் பாடல் ஒன்றை கேட்டேன் அப்போதே சிம்பு மேல் க்ரஷ் ஏற்பட்டுள்ளது.

அப்போது சிம்புவை யாரென்றே தெரியாத பின்பு அவர் பெயரை தெரிந்து கொண்டு தற்போது வரை 16 ஆண்டு காலமாக ஒருதலையாக காதலித்து வருகிறேன் என்றும் மேலும் நேரில் சிம்புவை பார்த்தால் உடனடியாக ப்ரபோஸ் செய்து விடுவேன் எனவும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இதோ அந்த வீடியோ..

Leave a Comment