அண்ணியின் காலில் விழுந்து கதறும் கண்ணன்.! எவன் கஷ்டப்பட்டா எனக்கு என்ன மீண்டும் வீடியோ எடுத்து மூர்த்தியின் கோபத்திற்கு ஆளான ஐசு.!

pandian-store-june-7
pandian-store-june-7

பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோடில் கண்ணன் வீட்டிற்கு வந்துள்ளதால் மூர்த்தி மிகவும் கோபமாக இருக்கிறார் அது மட்டும் இல்லாமல் தனத்திடம் உன் மனசாட்சியை தொட்டு சொல்லு அவன் பண்ணதெல்லாம் சரியா எனக் கேட்க அதற்கு தனம் அவங்க என்ன பண்ணினாலும் கடைசில இங்க வந்து தான் நிக்கிறாங்க மாமா நாம தான் அவுங்களுக்கு ஆதரவாக இருக்கணும். நீங்க எவ்வளவு பக்குவமா இருந்த ஆளு இப்படி பட்டு பட்டுன்னு பேசுறீங்களே மாமா என தனம் மூர்த்தியிடம் கேள்வி கேட்கிறார்.

உங்களுக்குள்ள இவ்ளோ கோவம் வருது நீங்க ரொம்ப மாறிட்டீங்க மாமா என அழுகிறார் சரி அழுகாத என்னதான் சொல்ல வர என மூர்த்தி கேட்கிறார் கண்ணனை இனி தனியாக விடக்கூடாது என்று தான் கதிர் இங்கு அழைத்துக் கொண்டு வந்திருக்கிறான் இனிமே தனியா விட கூடாது அவன் என்ன தப்பு பண்ணினாலும் கண்டிக்கலாம் அடிக்கலாம் அதுக்காக அப்படியே விட முடியாது என தனம் கூறுகிறார்.

மாமா கெஞ்சி கேட்கிறேன் ஐஸ்வர்யாவும் கூட வந்திருக்கா வயித்துல புள்ளையும் இருக்கு இப்படி ராத்திரியோட ராத்திரியா ஏதாவது பேசி அனுப்பிடாதீங்க எல்லாரும் பேசி முடிவு எடுத்துட்டீங்க இனிமே நான் பேசி என்ன பிரயோஜனம். என பேசிவிட்டு மூர்த்தி கிளம்புகிறார் அதன் பிறகு முல்லை மற்றும் தனம் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது முல்லை நீங்க பெரிய ஆள் மாமாவையே எப்படி பேசணுமோ அப்படி பேசி கவுத்துட்டீங்க என கூற அதற்கு தனம் இவ்வளவு நாள் குடும்பம் நடத்தி இருக்கேன் இது கூட தெரியாதா என பேசுகிறார்.

அடுத்த காட்சியில் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் முல்லை தனம் இருக்கும் இடத்திற்கு வருகிறார்கள் அப்பொழுது கண்ணன் என்ன மன்னிச்சிருங்க அண்ணி என கதறுகிறார் அதுமட்டுமில்லாமல் இவ்வளவு நாள் நான் சுயநலமாக இருந்திருக்கேன் நான் வெளியே போனாலும் நீங்க யாரும் என்னை விட்டுக் கொடுத்ததே கிடையாது எப்ப பாரு என்ன வந்து பாத்துட்டு தான் இருந்தீங்க ஆனா நான் தான் ரொம்ப சுயநலமா இருந்துட்டேன் என காலில் விழுந்து கதறுகிறார்.

ஆனால் முல்லை பர்பாமென்ஸ் பண்ணினது போதும் எழுந்திரு கண்ணா என கூறுகிறார் நான் performance பண்ணல அண்ணி  நெஜமாலுமே அழுகுறேன் எனக் கூற அது எனக்கும் தெரியும் நீ எழுந்திருக்க வேண்டும் தான் நான் இப்படி சொன்னேன் எனக்கு கூறுகிறார்கள். அடுத்த காட்சியில் ஜீவா மீனாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது ஒழுங்கா அண்ணன் கிட்ட பேசு அப்படி இப்படி பேசினா தானே கோபம் குறையும் என கூறுகிறார்.

அதுமட்டுமில்லாமல் மீனா கண்ணன் வீட்டிற்கு போய் விட்டான் அக்கா ஏதோ பேசி மாமாவ சமாளிச்சாச்சு எனவும் கூறுகிறார் அப்படியே நீயும் போகலாம் என்று ஆசை இருக்கு தானே நீயும் பேச வேண்டியதுதானே என கேட்க அதற்கு ஜீவா அண்ணன் தான் பணத்தை வாங்கிகளையே கோவமா தான் இருக்காரு என ஜீவாகூறுகிறார். மறுபக்கம் கண்ணனுக்கு டீ போட்டு வந்து கொடுக்கிறார் தனம் அதனை குடித்துவிட்டு ஆகா ஓகோ என புகழ்ந்து தள்ளுகிறார். கொஞ்ச நேரம் கழித்து மூர்த்தி வருகிறார் மூர்த்தி பார்த்தவுடன் கண்ணன் பயத்தில் பேப்பரை எடுத்து முகத்தை மூடி கொள்கிறார் பேப்பரை புடிங்கி எடுத்துகிட்டு  மூர்த்தி செல்கிறார் ஐஸ்வர்யா எங்கே என தனம் கேட்க அவள் வீடியோ எடுக்கிறார் எனக் கூறுகிறார்.

உடனே தனம் வீடியோ எடுப்பது மாமாவுக்கு பிடிக்காத அதனால் பார்த்து நடந்துக்கோங்க என கூறிவிட்டு செல்கிறார் ஆனால் மூர்த்தி பாத்ரூம் செல்லும் வழியில் ஐஸ்வர்யா வீடியோ எடுத்துக் கொண்டு இருக்கிறார் அது மட்டும் இல்லாமல் மூர்த்தியையும் வீடியோ எடுக்கிறார் இதனால் கடுப்பான மூர்த்தி தனத்திடம் கத்துகிறார் ஆனால் நான் எவ்வளவு சொல்லியும் ஐஸ்வர்யா கேட்கவில்லை எனக் கூறி விடுகிறார் தனம் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.