நடிச்சா ஹீரோவாகத்தான் நடிப்பேன் என பஞ்ச் பேசிய பல்லு பாலுவின் பரிதாப நிலைமை.!

0
actor_opt
actor_opt

சினிமாவில் நுழைய வேண்டும் என்பது பலரின் கனவு கோட்டையாக இருக்கிறது, இந்த கனவு கோட்டையில் ராஜாவாக வேண்டும் என நினைத்து பலர் கூஜா தூக்கி தான் வாழ்க்கையை நடத்துகிறார்கள், சினிமாவில் பல கனவுகளுடன் உள்ளே வருகிறார்கள் ஆனால் சிலர் மட்டுமே ராஜாவாக இருக்கிறார்கள்.

கதாநாயகன் கதாநாயகிகளாக நடிப்பவர்களுக்கு மட்டுமே சினிமா புகழையும் பணத்தையும் அள்ளிக் கொடுக்கும், ஆனால் துணை கதாபாத்திரங்களில் காலம் முழுவதும் நடித்தாலும் அவர்களை கஷ்டப்பட வைத்து அழகு பார்க்கிறது இந்த தமிழ் சினிமா, அதேபோல் துணை கதாபாத்திரத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டும் வந்து செல்பவர்களுக்கு சினிமா உத்தரவாதமில்லை. இதை நம் கண்முன்னே நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும் போது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

சினிமாவில் பெரிய ஆளாக வேண்டும் என நினைத்து கோயில் வாசலில் பிச்சை எடுக்கும் நபரை பற்றி தற்போது பார்க்கலாம், பரத் மற்றும் சந்தியா நடிப்பில் வெளியான காதல் திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்தவர் பல்லு பாலு, அந்த திரைப்படத்தில் வரும் வசனத்தில் உதவி இயக்குனர் சினிமா சான்ஸ் கேட்டு வரும் ரெண்டு பேரில் தன்னை விரிச்சககாந்த் என அறிமுகம் செய்துகொண்ட பல்லு பாலுவை பார்த்து உதவி இயக்குனர் கேள்வி கேட்பார்.

நீங்கள் ஏன் ஹீரோவாக நடிக்க ஆசைப்படுகிறீர்கள் ஏன் அமெரிக்கா மாப்பிள்ளை அண்ணன், தம்பி, நண்பன் அப்படி நடிக்க கூடாதா என கேட்பார் அதற்கு பல்லு பாலு  நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் நான் வெயிட் பண்றேன் என வசனம் பேசுவார் பல்லு பாலு. அப்புறம் கொஞ்சம் அரசியல், சிஎம், அப்புறம் டெல்லி அது போதும் என பேசுவார். இந்த நகைச்சுவை காமெடியை யாரும் மறந்திருக்க முடியாது காதல் திரைப்படத்திற்கு பிறகு பல்லு பாலுக்கு பட வாய்ப்பு அமையவில்லை.

அதேபோல் வேட்டைக்காரன் படத்தில் ஒரு காட்சியில் அந்த பெண்ணை நான் கட்டிக் கொள்கிறேன் என பேசியதும் அந்த கொசுவை அடிங்கடா என விஜய் சொல்வார் மேலும் இதனை தொடர்ந்து தூங்கா நகரம் உள்ளிட்ட 10 திரைப்படங்களில் நடித்துள்ள பால்லு பாலு பின்னர் பட வாய்ப்பு கிடைக்காமல் எங்கே சென்றார் என்று தெரியவில்லை. இப்படி இருக்க பல்லு பாலு ஒரு கோவிலில் பிச்சை எடுக்கிறார் என்று சமூகவலைதளத்தில் செய்திகள் பரவியது, அவரது அப்பா அம்மா இருவரும் இறந்த பிறகு பிச்சை எடுத்து வருவதாகவும் கூறப்பட்டது.

பல்லு பாலுவின் பேட்டியை பார்த்த பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் ஒருவர் சேர்ந்து அவரைத்தேடி உள்ளார்கள் பின்பு ஒரு கோவிலில் பிச்சை எடுத்து வந்ததை பார்த்து மனம் உடைந்து போன தீனா அவரை அழைத்து வந்து தங்க வைத்து தற்போது பாதுகாத்து வருகிறார்.