எழில்-வர்ஷினியின் திருமணத்தை நிறுத்தப் போவது இவர்தான்.! அதிரடியான திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி சீரியல்..

baakiya lakshmi
baakiya lakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியலான பாக்கியலட்சுமி சீரியலில் கோபி ராதிகாவை திருமணம் செய்து கொண்டதற்கு பிறகு பாக்யா எழில் இருவரும் கோவியின் மீது கடுப்பிலிருந்து வருவதால் கோபிக்கு மரியாதை தராமல் இருந்து வருகிறார்கள் எனவே இவர்களை பழிவாங்க வேண்டும் என கோபி பல பிரச்சனைகளை தந்து வருகிறார்.

அதாவது தற்பொழுது அவர் வீட்டை விற்பதாக கூறியதால் எப்படியாவது பணத்தை தயார் செய்ய வேண்டும் என எழில், பாக்யா இருவரும் நினைக்கிறார்கள் ஆனால் இவர்களால் 40 லட்சத்தை தயார் செய்ய முடியாத நிலையில் வேறு வழி இல்லாமல் எழில் வர்ஷினியை விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொள்கிறார் எனவே தற்பொழுது இவர்களுக்கு நிச்சயதார்த்தமும் முடிந்த நிலையில் அடுத்த வாரம் திருமணம் நடைபெற இருக்கிறது.

எனவே அதிரடியான பல திருப்பங்களுடன் இந்த வார நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது இதனை அடுத்து எழிலுக்கும் வர்ஷினிக்கும் திருமணம் என தெரிந்து கொண்ட அமிர்தா அதிர்ச்சியில் நிற்கிறார் உடனே இதனை பார்த்த ஈஸ்வரி அமிர்தாவை வெளியில் இழுத்துச் சென்று மிகவும் மோசமாக திட்டுகிறார் இதோடு இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

இப்படிப்பட்ட நிலையில் எழிலுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என தெரிந்து கொண்டும் பாக்யாவால் எதுவும் செய்ய முடியவில்லை இவ்வாறு செய்ய முயற்சித்தாலும் ஈஸ்வரி, செழியன் இருவரும் பாக்யாவை திட்டுகின்றனர். எனவே பாக்கியா வேறு வழியில்லாமல் கோபியிடம் தனியாக சந்தித்து பேசுகிறார்.

அதில் கோபியிடம் பிடிக்காமல் என்னை திருமணம் செய்து கொண்டீர்கள் எனவே வாழ்க்கை மிகவும் மோசமாக அமைந்தது இப்பொழுது என் மகன் பணத்திற்காக பிடிக்காத ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள போகிறான் என்று கூறியவுடன் கோபி இதனை பற்றி யோசிக்கிறார். தனக்கு நடந்தது தன்னுடைய மகனுக்கும் நடக்கக்கூடாது என திருமணத்தை நிறுத்த அதே மனமேடையில் அமிர்தா உடன் திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது இந்த திருப்பம் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.