கீழே விழுந்து ரத்தம் சொட்ட சொட்ட பாக்கியலட்சுமி ஜெனி.! வைரலாகும் வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. இந்த சீரியலில் ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலம் அதிலும் கோபி கதாபாத்திரம் தான்  ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.

இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி ராதிகாவை அழைத்துக் கொண்டு பாக்யா வீட்டிற்கு வந்து விடுகிறார் அதனால் ஒவ்வொரு நாளும் கோபிக்கு பிரச்சனை தான். அதிலும் கோபி பாக்யா மீது பழி சுமத்துவதால் செழியன் கோபியை அடிக்க கை ஓங்கிடுவான் இப்படி ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது பாக்கியலட்சுமி சீரியல்.

சில நாட்களுக்கு முன்பு இந்த சீரியலில் வெளியாகிய எபிசோடில் ஜெனி நிலா பாப்பாவிற்கு பால் கொடுப்பார் ராமமூர்த்தி வாங்கும் பொழுது தவறுதலாக கீழே போட்டு விடுவார். அது கீழே விழுந்து பால் ஊற்றி விடும் பிறகு ஜெனி நடந்து வரும்பொழுது பாலில் காலை வைத்து வழுக்கி விழுந்து விடுவார்.

, பிறகு ராதிகா தான் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஜெனியை காப்பாற்றுவார். பாலில் காலை வைத்து வழுக்கி விழுந்த ஜெனி சீரியலில் எதுவும் ஆகி இருக்காது ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் கீழே விழுந்ததில் கையில் உள்ள வளையல் குத்தி ரத்தம் சொட்ட சொட்ட எழுந்திருப்பார் அதனை பிறகு துடைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் வழுக்கி விழுந்தப்ப கூட உங்களுக்கு ஒன்னும் ஆகல ஆனா சூட்டிங் ஸ்பாட்டில் உண்மையாலுமே ரத்தம் வழிகிறது என கமெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள். ஜெனி செழியனின் மனைவியாக இந்த சீரியலில் நடித்த வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இதோ அந்த வீடியோ வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

Leave a Comment