திருமணமாகி 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் அப்பாவான விஜய், சூர்யா பட காமெடி நடிகர்.!

குள்ள மனிதனான காமெடி நடிகர் பக்ரு 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் அப்பாவாக உள்ள நிலையில் அது குறித்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் ஜீவா நடிப்பில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான டிஷ்யூம் என்ற படத்தில் அமிர்தாப் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் பக்ரு.

இவர் குள்ள நடிகர்களில் ஒருவராக தமிழ் சினிமாவில் கலக்கி வந்தார் இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் மிமிக்கிரி கலைஞராக பணியாற்றி வந்த இவருக்கு பிறகு மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் பிரபலமான இவர் தமிழில் டிஷ்யூம், அற்புதத் தீவு, காவலன், 7ம் அறிவு போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

இவ்வாறு நடிகராக பிரபலமான இவர் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றி வந்த நிலையில் பக்ருவின் உண்மையான பெயர் அஜய் குமார். இவர் கடந்த 2006ஆம் ஆண்டு காயத்ரி மோகன் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட நிலையில் திருமணத்திற்கு பிறகு இவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

pakru 1
pakru 1

ஆனால் அந்த குழந்தை பிறந்து இரண்டே வாரத்தில் இருந்த நிலையில் இதனால் வருத்தத்தில் இருந்த பக்ருக்கு பிறகு 2009ஆம் ஆண்டு மீண்டும் ஒரு பெண் குழந்தை இந்த தம்பதியினர்களுக்கு பிறந்தது மேலும் அந்த குழந்தைக்கு தீப்தா கீர்த்தி பெயர் வைத்துள்ளனர். அந்த வகையில் தற்பொழுது பக்ருவின் மகள் தீப்தாவிற்கு 14 வயது ஆகியுள்ள நிலையில் நடிகர் பக்ரு மீண்டும் அப்பாவாகி இருக்கிறார்.

pakru
pakru

சமீபத்தில் இவருக்கு மீண்டும் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்திருக்கிறது இவ்வாறு திருமணம் முடிந்த 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் பக்ரு அப்பாவாகி இருக்கும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் அதில் தனது மகளை கையில் ஏந்தி ஆனந்தத்துடன் பக்ரு இருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Leave a Comment