விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த சீரியலில் ஜெனிபர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் திவ்யா கணேஷ்க்கு சீரியலின் மூலம் ஏராளமான ரசிகர்கள் உருவாக்கி உள்ளார்கள் என்று தான் கூற வேண்டும்.
ஏனென்றால் இவர் லக்ஷ்மி வந்தாச்சு, சுமங்கலி உள்ளிட்ட இன்னும் ஏராளமான தொடர்களில் நடித்துள்ளார். மேலும் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கேளடி கண்மணி தொடர் மூலம் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இவர் பல சீரியல்களில் நடித்து வந்தாலும் பாக்கியலட்சுமி சீரியல்தான் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைவதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.
திவ்யா கணேஷ்க்கும் நடிகர் ஆர்கே சுரேஷ்க்கும் திருமணமாக முடிவு செய்திருந்தார்கள் ஆனால் அந்த திருமணம் நடைபெறாமல் போய்விட்டது. கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆர்கே சுரேஷ் மற்றும் திவ்யா இருவருக்கும் பிரஸ்மீட் ஒன்றை வைத்திருந்தார்கள். அதில் நாங்கள் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக கூறி இருந்தார்கள்.

இவர்கள் சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் எங்கள் திருமணம் நடைபெறுவதாக கூறியிருந்த நிலையில் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக இவர்களது திருமணம் நடைபெறாமல் போனது. இது குறித்து திவ்யா பேசுகையில் ஆர்கே சுரேஷ் நல்ல மனிதர். அதனால் எங்களுக்கு நிறைய விஷயங்கள் வேறுபாடு இருக்கிறது இதனால் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உள்ளதால் திருமணம் செய்ய விருப்பமில்லை. எந்த ஒரு சண்டையும் இல்லாமல் நாங்கள் பேசி முடிவு செய்தோம் என்று கூறினார்.

மேலும் ஆர்கே சுரேஷ் சினிமா பைனான்சியர் மது என்பவரை கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். 2020 ஆம் ஆண்டு இவர் வடக்கு ஸ்ரேயா என்ற அழகான ஒரு பெண் குழந்தை பிறந்தது. இப்படிப்பட்ட நிலையில் ஆர்கே சுரேஷ் 2019ஆம் ஆண்டு தன்னுடைய திருமணத்தை பேட்டி ஒன்றில் பேசியிருந்தார்.

அதாவது நான் ஒரு சிங்கிள் பேரண்ட் என்ற விஷயம் என்னைச் சுற்றியிருந்த நண்பர்களுக்கும் சினிமா துறையை சேர்ந்த சிலருக்கு மட்டுமே தெரியும். என்னுடைய மகன் கவின் அவனுக்கு 11 வயது ஆகிறது நானும் என் மனைவியும் நான்கு வருடங்களுக்கு முன்பே பிரிந்து விட்டோம் என்னுடைய மகன் கவின் அவனுடைய அம்மாவுடன் வாழ்ந்து வருகிறான்.
நானும் கவினும் அடிக்கடி சந்திப்போம் ஆனால் அதற்காக அவங்க அம்மா எந்த ஒரு தடையும் சொல்ல மாட்டாங்க, அவர் ரொம்ப தைரியமான பெண், நல்ல குணம் கொண்டவள். என்னுடைய பையனை நல்ல முறையில் வளர்த்து கொண்டு வருகிறார். எங்களுக்கிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதால் பெரிதாக எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்பதற்காக பிரிந்துவிட்டோம் என்று கூறியிருந்தார்.