விஜய் டிவி பிரபலத்தை திருமணம் செய்து கொள்ளப் போகும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா..! யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிபோடும்..

காலங்காலமாக சின்னத்திரை சீரியல் நடிகர் நடிகைகள் பலரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு வருகின்றனர். மேலும் திருமணத்திற்கு பிறகும் அவர்களது கேரியரில் கவனம் செலுத்தி தொடர்ந்து பயணித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் டிவியில் பிரபல டாப் சீரியல்களில் ஒன்றாக ஒளிபரப்பாகி வருவது பாக்கியலட்சுமி தொடர்.

இந்த தொடர் தற்போது மக்கள் மத்தியில் சுவாரசியமாக ஒளிபரப்பாகி வருகிறது இதில் இருக்கும் பாக்கியலட்சுமி, கோபி, எழில், அமிர்தா, ஜெனி போன்ற பல கதாபாத்திரங்களும் மக்களுக்கு மிகவும் பிடித்து உள்ளன. அந்த வகையில் இதில் அமிர்தா கதாபாத்திரத்தில் ரித்திகா என்ற நடிகை நடித்து வருகிறார்.

இந்த கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் ரித்திகா பெரிதும் பிரபலமடைந்தவர் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலக்கியதன் மூலமும் ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமானார். இந்நிலையில் தற்போது ரித்திகா குறித்த ஒரு தகவல் ஒன்று இணையதள பக்கத்தில் தீயாய் பரவி வருகின்றன.

அது என்னவென்றால்.. ரித்திகாவிற்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறதாம் மாப்பிள்ளை யார் என்றால் விஜய் டிவியில் ஒரு முக்கிய பொறுப்பில் இருக்கும் வினு என்ற நபர் என தெரிய வருகிறது இவர்கள் இருவருக்கும் வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி திருமண வரவேற்பு நடைபெற இருக்கிறது.

rithika-
rithika-

அதற்கு முன்கூட்டியே இருவரும் குடும்பத்தினர் மத்தியில் திருமணம் செய்து கொள்வார்கள் என தெரிய வருகிறது. மேலும் ரித்திகாவை திருமணம் செய்து கொள்ள போகும் வினுவும் விஜய் டிவியில் வேலை பார்க்கிறார் மற்றும் ரித்திகாவும் விஜய் டிவி சீரியலில் நடித்து வருகிறார் என்பதால் இது காதல் திருமணமாக இருக்க வாய்ப்பு உள்ளது.

Leave a Comment