நாடி நரம்பெல்லாம் கிரிக்கெட் கிரிக்கெட் என ஊறிப்போன ஒருத்தரால் மட்டுமே இது முடியும்.! ஐசிசி வெளியிட்ட புகைப்படம்.!

0

பாகிஸ்தான் அணி தற்போது ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது, இதில் மூன்று t20 போட்டிகளும் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது, இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த அசாம் தஸ்லிம் என்பவர் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார் இவர் சிறுவயதில் இருந்தே கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் கொண்டவர் அதனால் பாகிஸ்தான் விளையாடும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும் ஒரு மேட்ச் கூட விடாமல் பார்ப்பவர்.

இந்த நிலையில் கடந்த ஐந்தாம் தேதி இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது ஆனால் அன்று தான் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான போட்டியும். அன்றுதான் இரண்டாவது டி20 போட்டியும் நடைபெற இருந்தது இந்த போட்டியை அவர் தவறாமல் பார்க்க வேண்டும் என்பதற்காக அவர் செய்த செயல்தான் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அதன்படி ஐந்தாம் தேதி போட்டியை தவறாமல் பார்க்க வேண்டும் என்பதற்காக டிவி பார்த்துக்கொண்டே திருமண சடங்குகளை செய்துள்ளார். மேலும் இதனை புகைப்படமாக பதிவிட்டு தான் தீவிர கிரிக்கெட் ரசிகர் என்றும் எப்பொழுதும் மேட்ச் பார்ப்பதை தவறவிட்டதில்லை எனவும் பாகிஸ்தான் அணி எந்த நேரத்தில் விளையாடினாலும் அந்த போட்டியை பார்த்த பின்பு தான் தூங்குவேன் என பதிவிட்டுள்ளார்.

இந்த செய்தியை அப்படியே ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது இந்தப் பதிவுதான் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.