ஆதாரமே இல்லாமல் இந்திய அணியை எப்படி தப்பா பேசலாம் நீ.! சரமாரியாக கேள்வி கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

0
indian team
indian team

ஆதாரமில்லாமல் இந்திய அணியை பற்றி தவறாகப் பேசிய பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளக்கம் கேட்டுள்ளது.

உலக கோப்பை போட்டியில் அரையிறுதியுடன் இந்தியா வெளியேறியது இந்த நிலையில் அப்போது நடைபெற்ற பிரச்சனை தான் இப்பொழுது பூகம்பமாக வெடித்துள்ளது, உலக கோப்பை போட்டி லீக் இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் பாகிஸ்தான் அணி மீதி இருந்த நாள் போட்டிகளில் வென்றால் அரையிறுதிக்கு தேர்வு ஆகலாம் என்ற நிலை இருந்தது, அதே போல் இங்கிலாந்து அணி ஒரு போட்டியில் தோற்றால் கூட பாகிஸ்தான் அணி அரையிறுதி செல்லும் வாய்ப்பு அதிகம் இருந்தது.

இப்படி அரையிறுதி வாய்ப்பை அந்த அணியின் கையில் மட்டுமில்லாமல் இங்கிலாந்து அணியின் தோல்வியிலும் இருந்தது இந்த நிலையில் இங்கிலாந்து அணியிடம் வேண்டும் என்று இந்தியா தோற்கும் என சர்ச்சையான கருத்தை ஒன்றை கூறினார் பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி. அவர் கூறிய இந்த கருத்து கிரிக்கெட் முன்னாள் வீரர்கள் முதல் ரசிகர்கள் வரை சர்ச்சையை ஏற்படுத்தியது.

பாகிஸ்தான் அணிகள் அரை இறுதிக்கு கூட செல்லாமல் லீக் போட்டிகளிலேயே வெளியேறியது. இந்த நிலையில் உலக கோப்பை முடிந்த பிறகு பாகிஸ்தான் அணியின் ஆட்டத்தை கிரிக்கெட் கமிட்டி  ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆய்வு செய்ய இருக்கிறது, இப்படியிருக்க இந்திய அணியை பற்றி தவறாக பேசிய பாசித் அலி கராச்சி அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார், அப்பொழுது இந்திய அணி பற்றி எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் தவறாக பேசியது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளக்கம் கேட்டுள்ளது.