மைதானத்திலேயே அடித்துக் கொண்ட பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் வைரலாகும் வீடியோ

0
pakistan
pakistan

உலகக்கோப்பை போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது., இந்த போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டதால் ஒவ்வொரு போட்டியும் மிகவும் பரபரப்பாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது, இந்த நிலையில் நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதிக்கொண்டன, இதில் முதலில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது அதனால் பாகிஸ்தான் அணி பந்து வீசியது. முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்தது.

228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது, இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி கொஞ்சம் தடுமாற்றமான ஆட்டத்தை தான் வெளிப்படுத்தியது, பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக வாசிம் 49 ரன்கள் எடுத்திருந்தார், 49.4 ஓவரில் 230 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் வெற்றிக்கு பிறகு ஆப்கானிஸ்தான் ரசிகர்களும் பாகிஸ்தான் ரசிகர்களும் அடித்துக் கொண்டார்கள், மேலும் சில ரசிகர்கள் சேர்களை தூக்கி வீசியும் பலமாகத் தாக்கி கொண்டார்கள், இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது, அதுமட்டுமில்லாமல் இங்கு அடித்துகொண்டது மட்டுமில்லாமல் வெளியிலேயும் இவர்கள் தாக்கி கொண்டார்கள் என போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.