சத்தமே இல்லாமல் உருவாகும் பையா 2.? ஹீரோ, ஹீரோயின் இவங்க தான்..

0
paiya
paiya

கடந்த சில வருடங்களாக  பார்ட் 2, பார்ட் 3 என வரிசையாக படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த லிஸ்ட்டில் தற்பொழுது இணைந்துள்ளது தான் பையா 2 திரைப்படம். 2010 ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் உருவான  திரைப்படம் பையா. இந்த படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

இந்த படத்தில் ஹீரோவாக கார்த்தி நடித்திருந்தார் அவருக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார் மேலும்  மிலிண்ட் சோமன், சோனியா தீப்தி, ஜெகன், ஆர்பிட் ரங்கா, யோகி பாபு ராமச்சந்திர துரை ராஜ், சோனியா மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

இந்த படம் முழுக்க முழுக்க காதலியை அழைத்துக்கொண்டு காரில் பயணிக்கும் படமாக இருந்தது. அதே சமயம் இந்த படத்தில் காமெடி, ஆக்சன் என அனைத்தும் அற்புதமாக இருந்தது இந்த படம் வெற்றியால் நடிகை தமன்னாவுக்கும் சரி, நடிகர் கார்த்திக்கும் சரி அவர்களுடைய கேரியரில் பெஸ்ட் படமாக அமைந்தது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பார்ட் 2 எப்ப வரும் என ரசிகர்கள் கூச்சலிட்டனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்பொழுது அது நடக்க இருக்கிறது லிங்குசாமி உலக நாயகன் கூட்டணியில் ஒரு புதிய படம் வர வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறப்படுகிறது.

இந்த நிலையில் லிங்குசாமி பையா படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கப் இயக்கப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது அதில் ஹீரோவாக ஆர்யாவும், ஹீரோயின்னாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூரும் நடிக்க இருக்கின்றனர் என சொல்லப்படுகிறது இதற்கான அதிகார பூர்வ தகவல்களில் இன்னும் வெளிவரவில்லை.