விஜய் டிவியில் தரமான கதை உள்ள நல்ல சீரியல்களை தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து டிஎன்பி-யில் முன்னணி நாடகமாக வலம் வந்து கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்.
இந்த சீரியல் குடும்பத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதால் முதியவர்கள் முதல் குடும்ப இல்லத்தரசிகள் வரை அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த நாடகத்தில் காதலுக்கும் பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது.
அந்த வகையில் இந்த சீரியல் இளைஞர்கள் மத்தியில் பிரபலம் அடைவதற்கு முக்கிய காரணம் முல்லை மற்றும் கதிர் கேரக்டர் தான் இவர்களின் ஒன் ஸ்கிரீன் லவ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நாடகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சுஜிதா.இவர் இந்த சீரியலில் தனம் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இவர் வெள்ளித்திரையிலும் தனது சின்ன வயதிலிருந்தே நடித்து வந்தார் பிறகு படங்களில் நடிக்க பெரிதாக வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தற்போது சின்னத்திரையில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர் சீரியல் இவர் மிகவும் குடும்ப பெண் போல் நடித்திருப்பார். ஆனால் தற்பொழுது இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார்.
இந்நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு முழு மேக்கப்புடன் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படம்.