இது காதலன் திரைப்படத்தில் ஏ ஆர் ரகுமான் போட்ட பிட்டாச்சே.! தனுஷின் படிக்காதவன் படத்தில் இந்தப் பாடலை கேட்டால் உங்களுக்கே புரியும்.!

0

சினிமாவை பொறுத்தவரை ஒரு படத்தில் வந்த காட்சியை பட்டி டிங்கரிங் செய்து வேறு ஒரு திரைப்படத்தில் சொருகி விடுவார்கள், இது படத்தில் உள்ள காட்சிகள் மட்டும் அல்லாமல் இசையும் அப்படித்தான் எப்பொழுதோ போட்ட ஒரு படத்தில் உள்ள சின்ன மியூசிக்கை எடுத்து பட்டி டிங்கரிங் செய்து அதனை பாட்டாகவே வைத்து விடுகிறார்கள் பல இசையமைப்பாளர்கள்.

அந்த லிஸ்டில் பல  இசை அமைப்பாளர்கள் அப்படித்தான் செய்து வருகிறார்கள். அந்தவகையில் பிரபுதேவா நடிப்பில் வெளியாகிய காதலன் திரைப்படத்தில் ஏ ஆர் ரகுமான் போட்ட ஒரு பிட்டை படிக்காதவன் திரைப்படத்தில் பட்டி டிங்கரிங் செய்து பாட்டாகவே அமைத்துள்ளார் இசையமைப்பாளர் மணிஷர்மா.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் மணிஷர்மா, இவர் 2001 ஆம் ஆண்டு நரசிம்மா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பே ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழி திரைப்படங்களில் பல திரைப்படங்களில் இசையமத்துள்ளார் அதுமட்டுமில்லாமல் மனிஷர்மா பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் நரசிம்மா திரைப்படத்திற்கு பிறகு ஷாஜகான், போக்கிரி என பல திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார் அந்த வகையில் 2009 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியாகிய படிக்காதவன் திரைப்படத்திற்கும் இவர்தான் இசையமைத்துள்ளார்.

இவர் இசையமைத்துள்ள பிட்டு ஏ ஆர் ரகுமான் இசையமைத்த காதலன் திரைப்படத்தில் இருந்து சுடப்பட்டது என தற்பொழுது இணையதள வாசிகள் கண்டுபிடித்துள்ளார்கள், காதலன் திரைப்படத்தில் ஒரு காட்சியில் உள்ள இந்த மியூசிக் தான் படிக்காதவன் திரைப்படத்தில் அப்பா அம்மா விளையாட்டு விளையாடலாமா என்ற முழு பாடலுக்கும் இசை என இணையதள வாசிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.

இந்த வீடியோவை ஆறு நிமிடம் உற்று கவனித்தால் உங்களுக்கே தெரியும்.