ஹாப்பி பர்த்டே தலைவா.. படையப்பா ரீ ரிலீஸ் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கு.?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடும் ஒரே ஹீரோ என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினி தான். திரையில் அவர் சாதாரணமாக நடந்து வந்தாலே அது ஸ்டைல் தான்.

அப்படி அவர் செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் கொண்டாடி வரும் ரசிகர்கள் இன்று அவருடைய 75 ஆவது பிறந்த நாளை ஆரவாரமாக கொண்டாடுகின்றனர். சொல்லப்போனால் அதை திருவிழா போல் கொண்டாடி மகிழும் ரசிகர்களும் உண்டு.

மேலும் இன்று அவருடைய பிறந்தநாள் ஸ்பெஷல் ஆக படையப்பா ரீ ரிலீஸ் ஆகியிருக்கிறது. ஏற்கனவே டிக்கெட் புக்கிங் சாதனை படைத்த நிலையில் இன்று தியேட்டர்களும் பரபரப்பாக இருக்கிறது.

சென்னை பெங்களூர் என எல்லா ஊர்களிலும் ரசிகர்கள் இந்த படத்தை பார்த்து கொண்டாடி வருகின்றனர். தியேட்டரில் அவர்கள் கொண்டாடும் வீடியோக்கள் தான் இன்று சோசியல் மீடியா முழுவதும் வைரலாகி வருகிறது.

அதே போல் இதுவரை எந்த ரீ ரிலீஸ் படத்திற்கும் இப்படி ஒரு ரெஸ்பான்ஸ் கிடைத்தது கிடையாது. டிக்கெட் புக்கிங் கூட மிகப்பெரும் சாதனையாக இருக்கிறது. அப்படி என்றால் படத்தின் வசூல் கணக்கு நிச்சயம் ரெக்கார்ட் தான் என இப்போதே கோடம்பாக்க வட்டாரங்கள் சலசலக்கின்றன.

இந்த பெருமை எல்லாம் தலைவரை தான் சேரும். 50 ஆண்டு சினிமா பயணத்தில் இன்றும் அவர் உச்ச நடிகராக தன்னுடைய சிம்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்துள்ளார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.