நெசமான நீலாம்பரியே இவங்கதான்.! ஆல்பர்ட் தியேட்டரில் இருந்து படையப்பா ரீலை தூக்கிய ஜெயலலிதா.! நடு நடுங்கிய கே எஸ் ரவிக்குமார்.

padayappa : தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி இயக்குனராக வளம் வந்தவர் கேஎஸ் ரவி குமார் இவர் இயக்கத்தில் வெளியாகிய பல திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக மாறியது. இந்த நிலையில் படையப்பா திரைப்படத்தின் பொழுது ஒரு சுவாரசியமான சம்பவம் நடைபெற்றுள்ளது அது குறித்து கே எஸ் ரவிக்குமார் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

படையப்பா திரைப்படத்தின் நீளம் கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்திற்கு இருந்தது, அதனால் படத்தை பார்த்த பலரும் படத்தின் நீளத்தை குறைக்க சொன்னார்கள் பிறகு படத்தை எடிட் செய்து மீண்டும் நான் போட்டுக் காட்டினேன் அந்த திரைப்படத்தை ரஜினிகாந்த் உட்பட ரம்யா கிருஷ்ணன் என அனைவரும் பார்த்தார்கள்.

படத்தைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாதாரணமாக படம் ஓகே என சொல்லி கை கொடுத்து விட்டு சென்றார் எனக்கு ஒரே வருத்தமாக இருந்தது படத்தைப் பார்த்துவிட்டு பார்ட்டிக்கு போகலாம் என கூறி இருந்தார் ஆனால் படம் முடிந்த பிறகு அவர் எதுவுமே சொல்லாமல் போனதால் தலையை பிச்சி கொண்டு இருந்தேன்.

அது மட்டும் இல்லாமல் இரவு 11 மணிக்கு அவரிடம் இருந்து அழைப்பு வந்தது மன்னிக்கவும் உங்களை பார்ட்டிக்கு கூப்பிடாததற்கு காரணம் இதுதான் என ஒரு காரணத்தை கூறினார் படம் ஓடிக் கொண்டிருக்கும் பொழுது படத்தை பார்த்த பலரும் ஏதோ பக்கத்தில் இருக்கிறவர்களிடம் குசு குசு என பேசிக்கொண்டு இருந்தார்கள் அவர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளத்தான் உங்களை அழைக்கவில்லை என்று கூறினார்.

பார்ட்டிக்கு வந்த பலரும் ரஜினிகாந்த் அவர்களிடம் பேசாமல் இந்த திரைப்படத்திற்கு “நீலாம்பரி” என்று பெயர் வைத்திருக்கலாம் என கூறினாராம் ஏனென்றால் படம் முழுக்க நீலாம்பரி தான் ஆட்சி செய்கிறார் என கூறினார்களாம் இதனை ரஜினி சார் கே எஸ் ரவிக்குமாரிடம் சொன்னதாகவும் கூறினார். அது மட்டும் இல்லாமல் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என ரஜினி சாரை பார்த்து கே எஸ் ரவிக்குமார் கேட்டுள்ளார் அதற்கு எனக்கு படம் சூப்பராக இருக்கிறது என கூறி ரிலீசுக்கு ரெடி பண்ணி விடுங்கள் என கூறினார்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் பொழுது ஒரு சுவாரசியமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது அதாவது ஆல்பர்ட் தியேட்டரில் இருந்து இந்த படத்தின் ரீலை அப்பொழுது முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்கள் எடுத்து வர சொல்லி அவர் வீட்டில் இருக்கும் தியேட்டரில் படத்தை போட்டு பார்த்திருக்கிறார் இதை கேள்விப்பட்ட கேஎஸ் ரவிக்குமார் அவர்களுக்கு திக் திக் என இருந்ததாம்.

அதற்குக் காரணம் நீலாம்பரி ஏன் என்றால் படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தை ஜெயலலிதா அவர்களை மனதில் வைத்து தான் கதையை எழுதியுள்ளார் கே எஸ் ரவிக்குமார். அடுத்த நாள் ஃபோன் வரவில்லை உடனே ரஜினி சார் அவர்களிடம் ஃபோன் பண்ணி நான் கேட்டேன் உடனே  ரஜினி சார் அம்மாவுக்கு படம் மிகவும் பிடித்து விட்டது குறிப்பாக நீலாம்பரி கதாபாத்திரம் அவரை வெகுவாக கவர்ந்தது என ரஜினி சார் கேஎஸ் ரவிக்குமார் அவர்களிடம் சொன்னாராம்.