படையப்பா படத்தில் சௌந்தர்யா கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது இவர்தான்.! 20 வருடம் கழித்து வெளியான புகைப்படம்.

0

1999 ஆம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் படையப்பா. இந்த திரைப்படத்தில் நீலாம்பரியாக ரம்யாகிருஷ்ணனும் ரஜினிக்கு ஜோடியாக முன்னாள் கதாநாயகி சௌந்தர்யாவும்  நடித்திருந்தார்.

நீலாம்பரி என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது ரம்யா கிருஷ்ணன் தான் அந்த அளவு இந்த திரைப்படத்தில் அவரின் பெயர் உயர்ந்தது, அதேபோல் நீலாம்பரி கதாபாத்திரத்தின் மூலம் ரம்யா கிருஷ்ணனின் சினிமா வாழ்க்கை உச்சத்திற்கு சென்றது, இந்த திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிகை லட்சுமி மற்றும் சித்ரா செந்தில் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வந்தார்கள்.

அந்த காலகட்டத்தில் இந்த திரைப்படம் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது, அதேபோல் ரஜினியின் திரைப்பயணத்தில் இந்த திரைப்படம் முக்கிய திரைப்படமாக அமைந்தது, இந்த திரைப்படத்தில் முதன்முதலாக நடிகையாக நக்மா தான் நடித்து வந்தார் சில நாட்கள் நடித்துக் கொண்டிருந்த பிறகு எந்த ஒரு காரணமும் இல்லாமல் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் நிராகரித்து விட்டார்.

அதன்பிறகுதான் படையப்பா திரைப்படத்தில் சௌந்தர்யாவை கமிட் செய்தார்கள், சௌந்தர்யா தனது அப்பாவித்தனமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்து விட்டார், அதேபோல் படையப்பா சூட்டிங் ஸ்பாட்டில் நக்மா கேஎஸ் ரவிக்குமார் சூப்பர் ஸ்டார் ரஜினி அனைவரும் பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

Master