ஒரு மேஜிக்கல் ஸ்கிரிப்ட்டை உருவாக்கிய பா. ரஞ்சித்.! வேண்டாமென நிராகரித்த பிரபல நடிகர்.

அண்மை காலமாக இளம் இயக்குனர்கள் டாப் நட்சத்திரங்களுடன் கைகொடுத்து சிறப்பான மாஸ் கலந்த படங்களை கொடுத்து அசத்துகின்றனர் அந்த வகையில் பா ரஞ்சித் இதுவரை ரஜினி, கார்த்தி, ஆர்யா ஆகியோர்களை வைத்thu சிறப்பான படங்களை கொடுத்து அசத்தி உள்ளார்.

பா ரஞ்சித் முதலில் மெட்ராஸ் எனும் திரைப்படத்தை இயக்கி அறிமுகமானர் அதன்பின் ரஜினியுடன் காலா, கபாலி ஆகிய படங்களை கொடுத்து வெற்றி கண்டார் அதன்பின் 80,90 காலகட்டங்களில் நடந்த குத்துச் சண்டையை மையமாக வைத்து சார்பட்டா பரம்பரை என்ற படத்தை எடுத்து அசத்தினார் இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று சூப்பர் ஹிட் அடித்தது.

அதைத்தொடர்ந்து பா ரஞ்சித் நட்சத்திரம் நகர்கிறது என்னும் காதல் படத்தை உருவாக்கியுள்ளார் இந்த படம் வெளிவர ரெடியாக இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் அடுத்ததாக நடிப்பிற்கு பெயர் போன விக்ரமுடன் முதல்முறையாக கைகோர்த்து ஒரு புதிய படத்தை எடுக்க இருக்கிறார் அந்த படம் குறித்து சில தகவல்களையும் சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

விஜய்க்காக ஒரு மேஜிக்கல் ஸ்கிரிப்டை எழுதி வந்தேன் அந்த ஸ்கிரிப்ட் badman பட பாணியில் இயக்க திட்டமிட்டு இருந்தேன் அப்படி விஜய்க்காக உருவாகிய அந்த கதையை நான் தற்போது விக்ரமை வைத்து இயக்கப் போகிறேன் என கூறினார்.

பா ரஞ்சித் ஒரு படத்தை எடுக்க அதிக அவகாசம் எடுத்துக் கொண்டாலும் அந்த படத்தை சிறப்பாக எடுத்துக் கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு விருந்து படைப்பார். அந்த வகையில் பா ரஞ்சித் மற்றும் விக்ரம் இணையும் திரைப்படமும்  வேற லெவலில் இருக்கும் என கூறப்படுகிறது.

Leave a Comment