தங்கலான் திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட பா.ரஞ்சித்.! எதற்காக தெரியுமா.?

நிறைய தோல்வி திரைப்படங்களை தமிழ் திரை உலகில் கொடுத்து அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமாகிய நடிகர் தான் விக்ரம் இவர் சேது திரைப்படத்திற்குப் பிறகு நடித்த ஒரு சில திரைப்படங்கள் மக்களிடையே பிளாக் பாஸ்டர் ஹிட் கொடுத்துவிட்டது. அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பும் தந்தார்கள்.

பொதுவாகவே நடிகர் விக்ரம் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது சியான் என்றுதான் அனைவரும் கூப்பிடுவார்கள் மேலும் இவரது நடிப்பில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரமான கரிகாலச்சோழன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் முதல் பாகம் அமோக வெற்றியை தொடர்ந்து இந்த திரைப்படத்தின் இயக்குனர் மணிரத்னம் அவர்கள் இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளார்.

இந்த திரைப்படம் வருகின்ற 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.இதனைத்தொடர்ந்து பார்த்தால் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் தங்கலான் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் இவரது நாளைய பிறந்தநாள் முன்னிட்டு விக்ரமின் ரசிகர்கள் தற்பொழுது சமூக வலைதள பக்கங்களில் அவரது புகைப்படங்கள்,வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

அதே போல் இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களும் சமூக வலைதள பக்கங்களில் தங்கலான் திரைப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார் பார்ப்பதற்கு விக்ரம் பயங்கரமாக இருக்கும் இந்த போஸ்டர் தற்பொழுது இவரது ரசிகர்கள் மத்தியில் காட்டு தீ போல் இணையத்தில் வைரலாகி வருகிறது .

மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்கலான் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற வேண்டும் என்பதுதான் நாங்கள் ஆசைப்படுகிறோம் இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரமின் நடிப்பை பார்ப்பதற்கு நாங்கள் மிகவும் ஆர்வமாக இருக்கிறோம் எனவும் கூறி வருகிறார்கள்.

Leave a Comment