40,000 பாடல், ஐந்து முறை தேசிய விருது.. 90 வயதாகும் பாடகி பி சுசிலா எப்படி இருக்கிறார் தெரியுமா.?

சினிமாவைப் பொறுத்தவரை படம் ரசிகர்களிடையே எப்படி பேசப்படுகிறதோ அதேபோல் படத்தில் உள்ள பாடலும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு மிகவும் பிரபலம் அடையும் அந்த வகையில் ஒரு சில குரலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும்.

அப்படி தான் ஒரு தெய்வீக குரலாக சினிமாவில் இன்று வரை ஒளித்துக்கொண்டிருக்கும் குரல் தான் சுசிலாவின் குரல் இந்திய சினிமாவின் முன்னணி பாடகியாக பல ஹிட் திரைப்படங்களில் பல ஹிட் பாடல்களை கொடுத்தவர். ஒரு காலகட்டத்தில் ஒட்டுமொத்த உணர்வு பூர்வமான வழிபாடுகளை இசையில் பதிவு செய்த ஒரு மாயக் குரலாக இருந்தவர்.

1935 நவம்பர் 13ஆம் தேதி ஆந்திர பிரதேசத்தின் விஜய நகரம் மாவட்டத்தில் பிறந்தார். தற்பொழுது இவருக்கு 90 வயதை நெருங்கி விட்டது அப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இவர் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

நடிகர் ஜெயராம் மற்றும் அவரின் மனைவி பார்வதி ஆக இருவரும் அவரை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து ஜெயராம் பதிவிட்டுள்ளதாவது நம் அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு தெய்வீக குரலாக ஒலிக்கும் சுசீலா அம்மாவுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் என கூறியுள்ளார். அது மட்டும் இல்லாமல் சுசிலா அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

பாடகி சுசீலா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, சமஸ்கிருதம் சிங்களம், பெங்காலி உட்பட 12க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் 40000 அதிகமான பாடல்களை பாடியுள்ளார். அதிக மொழிகளில் பாடிய பாடகி என்பதற்கு கின்னஸ் உலக சாதனை பதிவுகளும் ஆசிய சாதனை பதிவுகளும் இந்த ஜாம்பவான் பாடகியை தேடி வந்தன.

அதேபோல் ரசிகர்கள் பலரும் இவரை அன்புடன் கான சரஸ்வதி, கந்தர்வ காயாகி, கன்னட கோகிலா என பல பெயர்களை இவருக்கு வைத்து அழைத்தனர் அதேபோல் சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதை தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகள் வென்றவர் இவர். 2008 ஆம் ஆண்டில் பத்மபூஷன் விருது வழங்கி கௌரவித்தது.