ஓவியா ஆர்மியின் அட்மின் மரணத்திற்காக ஓவியா என்ன செய்கிறார் பாருங்கள்!!

0

oviya wants to meet her die hard fan parents viral: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 1 மூலம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகை ஓவியா. இந்நிகழ்ச்சி வருவதற்கு முன்பு இவர் சில படங்களில் நடித்திருந்தாலும் எந்த ஒரு படமும் பெரிய அளவு வெற்றியை தரவில்லை.

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்றுதான் கூறவேண்டும். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கென ஒரு ஆர்மி உருவாகி தற்போது வரையிலும் இருந்து வருகிறது.

இவர் தமிழ் சினிமாவில் களவாணி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்தார். அதன் பிறகுதான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஓவியா. இவரின் குறும்புத்தனமான பேச்சுகள் இவர் செய்யும் விஷயங்கள் அனைத்தும் குழந்தை போன்று இருக்கும் எனவே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் தற்போது இவர் பல படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் நிலையில் தற்போது கொரோனா காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஓவியாவின் தீவிர ரசிகை சான்வி என்பவர் திடீரென்று மரணம் அடைந்து விட்டார். சான்வியின் மிகப் பெரிய ஆசை ஓவியாவை ஒரு தடவையாவது நேரில் சந்திக்க வேண்டும் என்பதாம்.

இந்த விஷயத்தை எப்படியோ அறிந்த ஓவியா உடனே அந்த ரசிகையின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து. அவர்களின் பெற்றோரை நான் நேரில் சந்திக்க வேண்டும் எனவே ரசிகர்களிடம் எப்படியாவது அவர்களை நான் மீட்பன்னுவதற்கு உதவி செய்யுங்கள் என்று கூறி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதனை அறிந்த ரசிகர்கள் நெகிழ்ச்சியில் உள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் ஓவியாவிற்கு பாராட்டுகளை அள்ளிக் குவித்து வருகிறார்கள்.